7th Pay Commission, DA Hike: கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் 4 சதவிகித அதிகரிப்பை அறிவித்தது. இன்னும் சில ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு திருத்தப்பட்ட ஊதியம் கிடைக்கவில்லை. இவர்களுக்கு 3 மாத அரியர் தொகையுடன் ஏப்ரல் மாதத்தில் இந்த தொகை கிடைக்கும் என கூறப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்தது


கடந்த மாதம் அகவிலைப்படி உயர்வை (DA Hike) அறிவிக்கும் போது, மார்ச் மாத ஊதியம் வெளியாகும் வரை நிலுவைத் தொகை அதாவது அரியர் தொகை வழங்கப்பட மாட்டாது என அரசு தெரிவித்தது. "மார்ச் 2024 சம்பளம் வழங்கும் தேதிக்கு முன், அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்பட மாட்டாது.” என அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பாணையில் (OM) குறிப்பிடப்பட்டது.


மார்ச் 7 அன்று, மத்திய அமைச்சரவை (Dearness Allowance) அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்து மொத்த அகவிலைப்படியை 50% ஆக உயர்த்துவதற்கு அங்கீகாரம் அளித்தது. இதன் மூலம் சுமார் ஒரு கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயன் கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது. அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ரூ.12,868 கோடி செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


அகவிலைப்படி அதிகரித்ததை அடுத்து இன்னும் சில அலவன்சுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வீட்டு வாடகை கொடுப்பனவில் (House Rent Allowance) நல்ல அதிகரிப்பு இருக்கும். ஏழாவது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிதுரைகளின் படி, அகவிலைப்படி 50% -ஐ எட்டும்போது வீட்டு வாடகை கொடுப்பனவு விகிதங்களில் மாற்றங்களை செய்ய வேண்டும். அதன் படி ஊழியர்களுக்கான HRA இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. 


மத்திய அரசு ஊழியரின் HRA அவர்கள் வசிக்கும் நகரத்தைப் பொறுத்தது. தற்போது X வகை நகரங்களில் உள்ள பணியாளர்கள் அதிகபட்சமாக 27 சதவிகித HRA -ஐ பெற்று வருகிறார்கள். HRA அதிகரிப்புக்கு பிறகு இது 30 சதவீதமாக உயரும். அடுத்த வகையான Y வகை நகரங்களில் பணியாளர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு 18 சதவீதமாக உள்ளது. இது இப்போது 20 சதவிகிதமாக அதிகரிக்கும். அடுத்த பிரிவான Z பிரிவு ஊழியர்களுக்கு தற்போது 9 சதவிகித வீட்டு வாடகை கொடுப்பனவு கிடைக்கிறது. இது இப்போது 10 சதவிகிதமாக உயரும். 


மேலும் படிக்க | HDFC Vs ICICI Vs Axis வங்கி ... எது பெஸ்ட் முதலீடு... ஒரு ஒப்பீடு..!


அகவிலைப்படி உயர்வுக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?


அகவிலைப்படி 4% அதிகரித்ததை அடுத்து மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? இதற்கான கணக்கீடு என்ன? ஒரு உதாரணத்தில் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.  


- ஒரு ஊழியரின் மாத வருமானம் ரூ.50,000 மற்றும் அடிப்படை ஊதியம் ரூ.15,000 என வைத்துக்கொள்வோம். 


- அவர் தற்போது அடிப்படை சம்பளத்தில் 46% டிஏ ஆக ரூ.6,900 பெறுகிறார். 


- டிஎ 4% அதிகரிக்கப்பட்டவுடன் ஊழியரின் அகவிலைப்படி ரூ.7,500 ஆக இருக்கும், இது முந்தைய தொகையான ரூ.6,900 ஐ விட ரூ.600 அதிகமாகும். 


- இந்த வழியில், ரூ.15,000 அடிப்படை ஊதியத்தில் ஒருவருடைய மாதம் சம்பளம் ரூ.50,000 ஆக இருந்தால், அவருடைய வருமான அதிகரிப்பு ரூ.600 ஆக இருக்கும். 


மேலும் படிக்க | EPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ