7வது ஊதியக் குழு, டிஏ ஊயர்வு, சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி உள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும். ஜனவரி 31 அன்று, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியுள்ளது உறுதி செய்யப்படும். 2024 ஆம் ஆண்டில் முதல் முறையாக அகவிலைப்படி அதிகரிக்கும். எனினும், அரசின் அறிவிப்புக்கு மார்ச் வரை காத்திருக்க வேண்டும். பணவீக்க புள்ளிவிவரங்கள் வந்த பிறகு, அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது தெரியவரும். அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரித்து, அது 50 சதவீதத்தை எட்டும் என்பது இதுவரையிலான புள்ளிவிவரங்களில் இருந்து தெளிவாகிறது. ஆனால், அரசின் ஒப்புதலுக்குப் பிறகுதான் ஊழியர்களுக்கு இது அமல்படுத்தப்படுகிறது. பொதுவாக இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகுதான் அகவிலைப்படியை அதிகரிக்க அரசாங்கம் ஒப்புதல் அளிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படியில் 4 சதவீத அதிகரிப்பு: காரணம் என்ன?


மத்திய அரசு ஊழியர்களுக்கான (Central Government Employees) அகவிலைப்படி அதிகரிப்பு ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அடிப்படையில் அமைந்துள்ளது. இது அரையாண்டு அடிப்படையில் வருடத்திற்கு இரண்டு முறை அதிகரிக்கப்படுகின்றது. ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையிலும், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (Dearness Allowance) ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையிலும் கணக்கிடப்படுகின்றது.  நவம்பர் வரை வந்துள்ள ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்படி குறைந்தபட்சம் 50 சதவிகிதத்தை எட்டும் என்பது தெளிவாகிறது. டிசம்பர் தரவு வந்தவுடன் முழுமையான உயர்வு பற்றி தெரியவரும். தற்போது ஊழியர்களுக்கு 46% டி.ஏ (DA) வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | SCSS vs Bank FDs: மூத்த குடிமக்களுக்கு அசத்தல் வட்டி, பம்பர் லாபம் அளிக்கும் திட்டம் எது


இதுவரை நவம்பர் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் எண்கள் வந்துள்ளன. குறியீட்டில் 0.7 புள்ளிகள் அதிகரிப்பு காணப்பட்டு 139.1 இது புள்ளிகளாக உள்ளது. அகவிலைப்படி கால்குலேட்டரின் (DA CAlculator) படி, குறியீட்டு அடிப்படையில் அகவிலைப்படி 49.68 சதவீதத்தை எட்டியுள்ளது. தசமத்திற்குப் பின் உள்ள இலக்கமானது 0.50க்கு அதிகமாக இருப்பதால், அது 50 சதவீதமாகக் கருதப்படும். இவ்வாறான நிலையில் 4 சதவீத அதிகரிப்பு காணப்படுகின்றது.


டிசம்பர் குறியீட்டிலிருந்து அகவிலைப்படி இறுதி செய்யப்படும்


நவம்பர் மாத எண்கள் அகவிலைப்படி 50 சதவீதமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. ஆனால், டிசம்பர் எண்கள் இன்னும் வரவில்லை. டிசம்பரில் குறியீட்டு எண் 1 புள்ளி அதிகரித்தாலும், அகவிலைப்படி 50.40 சதவீதத்தை எட்டும். அத்தகைய சூழ்நிலையிலும், அகவிலைப்படி 50 சதவீதமாக இருக்கும். குறியீட்டு எண் 2 புள்ளிகள் உயர்ந்தாலும், DA 50.49 சதவீதத்தை எட்டும். அது தசம அடிப்படையில் 50 சதவீதமாக இருக்கும். எனவே, இம்முறையும் அகவிலைப்படி உயர்வு (DA Hike) 4 சதவீதம்  என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இறுதி சதவிகிதம் தெரிய டிசம்பர் எண்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும்.


50 சதவிகிதத்திற்குப் பிறகு அகவிலைப்படி 0 ஆகிவிடும்


7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) கீழ், மத்திய ஊழியர்களுக்கு 2024 ஜனவரி முதல் 50 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். ஆனால், இதற்குப் பிறகு அகவிலைப்படி பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். இதற்குப் பிறகு அகவிலைப்படி கணக்கீடு 0 முதல் தொடங்கும். ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் டிஏ சேர்க்கப்படும். அதாவது, ஒரு ஊழியரின் ஊதியக் குழுவின்படி குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 18000 ரூபாயாக இருந்தால், 9000 ரூபாயில் 50 சதவிகிதம் அவருடைய சம்பளத்துடன் சேர்க்கப்படும்.


மேலும் படிக்க | RBI New Rules: வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை: ரிசர்வ் வங்கியின் புதிய விதி இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ