RBI New Rules on Account Minimum Balance: உங்களிடம் வங்கிக்கணக்கு உள்ளதா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. நீங்கள் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தவில்லை என்றால், குறைந்தபட்ச இருப்புத் தொகையை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. செயலிழந்த கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக வங்கிகள் அபராதம் விதிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படாத கணக்குகளும் இதில் அடங்கும். இந்த புதிய விதி ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளில் வேறு என்ன இருக்கிறது?
ஸ்காலர்ஷிப் அல்லது நேரடிப் பலன்களைப் பெறுவதற்காக திறக்கப்பட்ட கணக்குகளை செயல்படாதவை என வங்கிகள் வகைப்படுத்த முடியாது என்றும் ஆர்பிஐ (RBI) தெரிவித்துள்ளது. இந்தக் கணக்குகள் இரண்டு வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தாலும் வங்கிகள் இவற்றை அந்த வகையில் சேர்க்க முடியாது. செயல்படாத கணக்குகளுக்கான (Inoperative Accounts) சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன் மூலம் வங்கிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையில், இந்த அறிவுறுத்தல்கள் வங்கி அமைப்பில் க்ளெய்ம் செய்யப்படாத டெபாசிட்களைக் குறைக்கவும், அத்தகைய தொகைகளை அவற்றின் உண்மையான சொந்தக்காரர்களுக்கு திருப்பித் தரவும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
வங்கிகள் வாடிக்கையாளர்களை எப்படி டொடர்பு கொள்ளும்
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, வங்கிகள் வாடிக்கையாளர்களின் கணக்கு (Bank Account) செயலிழக்கப்பட்டது குறித்து எஸ்எம்எஸ், கடிதம் அல்லது அஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும். இந்த சுற்றறிக்கையில், செயலற்ற கணக்கின் உரிமையாளர் பதிலளிக்கவில்லை என்றால், வங்கிகள் கணக்கு வைத்திருப்பவரை அறிமுகப்படுத்திய நபரை அல்லது கணக்கு வைத்திருப்பவரின் நாமினியை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் வங்கிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | வங்கி மற்றும் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள்
கணக்கை செயல்படுத்துவதற்கு கட்டணம் இல்லை
ரிசர்வ் வங்கியின் புதிய சுற்றறிக்கையின்படி, செயலிழந்த கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (Minimum Balance)பராமரிக்காததற்காக வங்கிகள் அபராதம் விதிக்க முடியாது. விதியின்படி, செயலிழந்த கணக்குகளை செயல்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, மார்ச் 2023க்குள் க்ளெய்ம் செய்யப்படாத டெபாசிட்கள் 28 சதவீதம் அதிகரித்து ரூ.42272 கோடியை எட்டியுள்ளன. 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் க்ளெய்ம் செயல்படாத டெபாசிட் கணக்குகளின் இருப்பை வங்கிகள் வைப்பாளர் மற்றும் ரிசர்வ் வங்கியின் கல்வி விழிப்புணர்வு நிதிக்கு (Education Awareness Fund) மாற்றும்.
முன்னதாக, குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக அபராதம் விதிக்கப்படுவதால் கணக்குகளில் இருப்பு எதிர்மறையாக மாறாமல் பார்த்துக் கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதற்குப் பிறகும், பல வங்கிகள் அபராதம் விதிப்பது தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மத்திய வங்கியான ஆர்பிஐ, வங்கிச் செயல்முறைகளை எளிதாக்கவும், வாடிக்கையாளர்களின் வசதிகளை அதிகரிக்கவும், அவர்களது சேமிப்பையும், பணத்தையும் பாதுகாக்கவும் அவ்வப்போது பல புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது, பழைய விதிகளில் மாற்றங்களை செய்கிறது. வங்கிக் கணக்கு குறைந்தபட்ச இருப்பு தொடர்பான இந்த செயல்முறையும் மக்கள் நலன் கருதி ஆர்பிஐ எடுத்துள்ள ஒரு மிகப்பெரிய நடவடிக்கையாகும். வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக வங்கிகளை முடக்கும் வகையில் மத்திய வங்கி சமீப காலங்களில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ