7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. அடுத்த ஆண்டு அவர்களது சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் பல பெரிய மாற்றங்கள் காணப்படலாம். புதிய ஆண்டில் அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கும். அதே நேரத்தில் அரசாங்கம் அடுத்த ஊதியக் குழுவைப் பற்றிய புதுப்பிப்பை வழங்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், மிகப்பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால், ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் நல்ல ஏற்றம் இருக்கக்கூடும். இது குறித்தும் அகவிலைப்படி உயர்வை பற்றியும் இந்த பதிவில் காணலாம். 


அகவிலைப்படி உயர்வு


இதுவரை வந்துள்ள ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின் மூலம் அடுத்த முறையும், அதாவது ஜனவரி 2024 -இலும் அகவிலைப்படியில் (Dearness Allowance) 4-5 சதவீத உயர்வு இருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. இதன் மூலம், அதிக சம்பளத்தில் உள்ள ஊழியர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்வு கிடைக்கும். இதன் காரணமாக 1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடியாக பயனடைவார்கள்.


அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டும்


தற்போது ஊழியர்கள் 46 சதவீத அகவிலைப்படியை (DA) பெற்று வருகிறார்கள். அடுத்ததாக 2024 ஜனவரி புத்தாண்டில் மோடி அரசு மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை 4-5 சதவீதம் வரை உயர்த்தக்கூடும் என நம்பப்படுகின்றது. செப்டம்பர் வரையிலான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை அகவிலைப்படி 2.50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது டிஏ மதிப்பெண் 48.54 சதவீதமாக உள்ளது. பொருளாதார நிபுணர்களின் மதிப்பீடுகளின் படி, ஜனவரியில் அகவிலைப்படி 51 சதவீதத்தை எட்டும்.


ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: குறைந்தபட்ச சம்பளம் 8000 ரூபாய் உயரும்


ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பது குறித்தும் பேசப்படுகிறது. இது நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும். 7-வது ஊதியக் குழுவின் கீழ் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.8,860 உயரும். ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் தற்போது 2.57 ஆக உள்ளது. இது 3.68 ஆக உயர்த்தப்பட்டால், லெவல்-1 இன் தர ஊதியத்தின் குறைந்தபட்ச வரம்பு ரூ.26,000 -ஐ எட்டும். அதாவது ஊழியர்களின் சம்பளத்தில் நேரடியாக ரூ.8,000 உயர்வு இருக்கும்.


மேலும் படிக்க | அறிவிக்கப்படாத கட்டண வசூல்! வெட்ட வெளிச்சமான Google payஇன் தகிடுதத்தங்கள்


சம்பளம் ரூ.49,420 அதிகரிக்கும்


எடுத்துக்காட்டாக, லெவல்-1ல் உள்ள கிரேடு பே 1800ல் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அடிப்படைச் சம்பளம் ரூ.18,000 என்றால், அலவன்ஸ்கள் தவிர்த்து, ஃபிட்மென்ட் ஃபாக்டரின்படி கணக்கிடப்படும் சம்பளம் ரூ.18,000 X 2.57 = ரூ.46,260 ஆக இருக்கும். இதை 3.68 ஆகக் கருதினால் சம்பளம் 26,000X3.68 = ரூ.95,680 ஆக இருக்கும். அதாவது ஊழியர்களின் சம்பளத்தில் மொத்த வித்தியாசம் ரூ.49,420 ஆக இருக்கும். இந்த கணக்கீடு குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச சம்பளம் உள்ளவர்களுக்கு பெரிய பலன்கள் கிடைக்கும்.


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்றால் என்ன?


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்பது அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான சூத்திரம் ஆகும். இது 7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின்படி செயல்படுத்தப்பட்டது. இதனால், ஊழியர்களின் சம்பளம் தானாக உயரும். கடைசியாக 2016 இல் ஃபிட்மெண்ட் ஃபாக்டர்  அதிகரிக்கப்பட்டது. அப்போது மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, தற்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor) 2.57 ஆகும். 


மேலும் படிக்க | வங்கிகளுக்கு செக் வைத்த ரிசர்வ் வங்கி: 5 புதிய விதிகள்...குஷியில் கஸ்டமர்ஸ்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ