திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா வரப்போகும் புத்தாண்டில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டு பரிசை அறிவித்திருக்கிறார்.  அதாவது தற்போது மாநில அரசு அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியையும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படியையும் 12 சதவீதம் உயர்த்தியுள்ளது.  அரசின் இந்த முடிவிற்கு பிறகு அரசு ஊழியர்களின் டிஏ 8 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ITR Filing: நாளையே கடைசி நாள்...ஆன்லைனில் ஈசியா செய்யலாம் 



மாநில அரசு அறிவித்துள்ள இந்த உயர்வால் 1,04,600 நிரந்தர ஊழியர்களும் 80,800 ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று முதல்வர் சாஹா கூறியுள்ளார்.  மேலும் கூறுகையில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 12 சதவீதம் உயர்த்தப்பட்டதன் மூலம் மாநில அரசுக்கு மாதந்தோறும் ரூ.120 கோடியும், ஆண்டு அடிப்படையில் ரூ.1,440 கோடியும் கூடுதல் சுமை ஏற்படும் என்று முதல்வர் கூறினார்.  மாநிலத்தின் வளர்ச்சி சரியான அளவில் இல்லாமல் இருந்தாலும் அரசி அதன் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நன்மையை செய்துள்ளது.  இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயனடைவார்கள்.


தற்போது வெளியாகியுள்ள சில தகவல்களின்படி, 2023 ஆம் ஆண்டின் முன் அகவிலைப்படி உயர்வு 4 சதவீதமாக இருக்கும் என்றும் மொத்த அகவிலைப்படி 48 சதவீதமாக உயரும் என்றும் கூறப்படுகிறது.  இந்த உயர்வின் மூலமாக ஏறத்தாழ 48 லட்சம் ஊழியர்களுடன் சேர்த்து, 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள், அகவிலை நிவாரணம் (டிஆர்) வடிவத்தில் பெரும் பலனை பெறுவார்கள்.


மேலும் படிக்க | விடுமுறையில் இருப்பவரை தொந்தரவு செய்தால் 1 லட்சம் அபராதம் - அடடா நல்ல ஆபிஸா இருக்கே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ