7th Pay Commission: ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு வரும் ரூ. 21622!
அகவிலைப்படி உயர்வின் மூலம் கிடைக்கப்போகும் அதிகபட்ச சம்பளத்தை கணக்கிட்டால், அடிப்படை சம்பளமான ரூ.56,900-ல் ஒவ்வொரு மாதமும் ரூ. 21622 அகவிலைப்படியாக கிடைக்கும்,
அகவிலைப்படி உயர்வு குறித்து காத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருக்க போகிறது, விரைவில் அவர்களது வங்கி கணக்கு பணத்தால் நிரம்பி வழியப்போகிறது. ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்ந்துள்ளது, இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி பணமானது கூடிய விரைவில் அரசு ஊழியர்களின் கணக்கில் வரப்போகிறது, இது அவர்களை மகிழ்ச்சியடைய செய்யப்போகிறது. ஊழியர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவது குறித்த அறிவிப்பை அரசாங்கம் செப்டெம்பர் மாதத்தில் அறிவிக்கக்கூடும் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மாதத்தில் பணம் வங்கி கணக்கில் டிரான்ஸ்பர் செய்யப்படுவது மட்டுமின்றி இதுவரை நிலுவையில் இருந்து வந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான தொகையும் ஊழியர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
7வது ஊதியக் குழுவின் மூலம் மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தற்போது 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி உயரத்துவதாக கூறப்பட்டிருக்கிறது, அதன்படி அகவிலைப்படியை 4% உயர்த்துவது குறித்து அரசும் முறையான அறிவிப்பை வெளியிட்டதும், அடுத்த மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு அகவிலைப்படி 4% அதிகரித்து இறுதியாக அவர்களுக்கு 38% அகவிலைப்படி கிடைக்கும்.
அகவிலைப்படி உயர்வின் மூலம் கிடைக்கப்போகும் அதிகபட்ச சம்பளத்தை கணக்கிட்டால், அடிப்படை சம்பளமான ரூ.56,900-ல் ஒவ்வொரு மாதமும் ரூ.21622 அகவிலைப்படியாக கிடைக்கும், அதாவது இந்த ஊதிய விகிதத்தில் உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ.2,59,464 லட்சம் பலன் பெறுவார்கள். 7வது ஊதியக் குழுவின் படி, அடிப்படை சம்பளம் ரூ.31550 ஆகவும், அகவிலைப்படி 38 சதவீதமாக இருந்தால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
அடிப்படை சம்பளம் - ரூ 31550
அகவிலைப்படி 38 சதவீதம் - ரூ 11989
தற்போதுள்ள DA – 34% – Rs 10727
எவ்வளவு டிஏ அதிகரிக்கும் - 4 சதவீதம்
மாதாந்திர சம்பள உயர்வு - ரூ 1262
ஆண்டு ஊதிய உயர்வு - ரூ 15144 ஆக கிடைக்கும்
மேலும் படிக்க | சிபில் ஸ்கோர் பாதிக்கப்படாமல் க்ரெடிட் கார்டுகளை ரத்து செய்ய வழிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ