புதுடெல்லி:  லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய அளவில் நிம்மதி அளிக்கும் வகையில்,   நிலுவையில் உள்ள மூன்று தவணைக்கான டிஏ மற்றும் டிஆர் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய தேதிகளில் மத்திய அரசு ஊழியர்களுக்கான மூன்று தவணைக்கான கொடுப்பனவு, மற்றும் ஓய்வூதியர்களான கொடுப்பனவு நிவாரண தொகையை நிறுத்தி வைத்திருந்தது.


மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தாகூர் கூறியதாவது: "கொடுப்பனவின் எதிர்கால தவணைகளை வெளியிடுவதற்கான முடிவு எடுக்கப்படும் போது,  01.07.2021 உடன் கூடவே, ​​01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021  ஆகிய காலங்களுக்கான டிஏ  தொகை வழங்கப்படும் என்றும்,  01.07.2021 முதல் திருத்தி அமல்படுத்தப்பட்ட ஒட்டுமொத்  விகிதங்களில் சேர்க்கப்படும்" என்றும் கூறினார்.


ALSO READ | தீராத பண பிரச்சனையா...கவலை வேண்டாம்.. இந்த நான்கு விஷயங்களை கடைபிடித்தால் போதும் ..!!!


மத்திய அரசு ஊழியர்கள் மாதாந்திர சம்பள உயர்வு கணக்கிடும்போது 2.57 இன் 7 வது சிபிசிக்கு ஏற்றபடி கணக்கிடப்படும். ஒரு ஊழியர் மாதாந்திர அடிப்படை சம்பளம் ரூ .21,000 என்றால், 7 வது சிபிசி (7th CPC)  அடிப்படையில் மாதாந்திர  சம்பள உயர்வு ரூ .51,400 (ரூ. 20,000 x 2.57) ஆகும்.


தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்களுக்கு 17 சதவீத டி.ஏ கிடைக்கிறது. இது 2019 ஜனவரியில் இருந்து மேலும் திருத்தத்துடன் 2019 ஜூலை முதல் நடைமுறைக்கு வந்தது. ஆனால் இது அடுத்த இரண்டு திருத்தங்களுடன் செயல்படுத்தப்படாமல் கோவிட் காரணமாக நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு, மத்திய அமைச்சரவை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான டிஏவை 4 சதவீதம் அதிகரித்து 21 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளித்தது. இது ஜனவரி 1, 2020 முதல் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், தொற்றுநோயை அடுத்து, ஓய்வூதியம் பெறுவோருக்கான டிஆருடன் , மத்திய அரசு ஊழியர்களுக்கான் டிஏ-ம் நிறுத்தப்பட்டது.


இருப்பினும், அதிகரிக்கப்படும் டிஏ ஜூலை 1 அன்றிலிருந்து மட்டுமே பொருந்தும், அதாவது முந்தைய காலத்திற்கான திருத்தப்பட்ட டிஏவிற்கான நிலுவைத் தொகை ஊழியர்களுக்கு கிடைக்காது.


ALSO READ | IPL 2021 ரசிகர்களுக்கு Good News! Reliance Jio கொண்டு வந்துள்ளது அசத்தல் திட்டங்கள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR