IPL 2021 ரசிகர்களுக்கு Good News! Reliance Jio கொண்டுவந்துள்ளது அசத்தல் திட்டங்கள்

ஐபிஎல் 2021 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, ஜியோ தனது பயனர்களுக்காக ஹாட்ஸ்டார் வழியாக கிரிக்கெட் நடவடிக்கைகளை நேரலையாக காணும் பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 8, 2021, 07:47 PM IST
  • ஜியோ பயனர்கள் எட்டு ஐபிஎல் அணிகளின் வீரர்களையும் சந்தித்து வாழ்த்துவதற்கான வாய்ப்பைப் பெறலாம்.
  • எட்டு ஐபிஎல் அணிகளின் வீரர்களையும் சந்தித்து வாழ்த்துவதற்கான வாய்ப்பைப் பெறலாம்.
  • பயனர்கள் இப்போது ஐபிஎல் அடிப்படையிலான குறிப்பிட்ட ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வுசெய்ய முடியும்.
IPL 2021 ரசிகர்களுக்கு Good News! Reliance Jio கொண்டுவந்துள்ளது அசத்தல் திட்டங்கள் title=

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) வரவிருக்கும் IPL 2021 ரசிகர்களுக்காகவே ஒரு அசத்தலான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 

ஐபிஎல் 2021 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, ஜியோ தனது பயனர்களுக்காக ஹாட்ஸ்டார் வழியாக கிரிக்கெட் நடவடிக்கைகளை நேரலையாக காணும் பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

அதோடு, ஜியோபோன் பயனர்கள் தங்கள் சாதனங்களில் புதிய ஜியோ கிரிக்கெட் செயலியை இலவசமாகப் பெறலாம். பயனர்கள் கிரிக்கெட் ஸ்கோர் தொடர்பாக  உடனுக்குடன் தகவலை பெறலாம். மேலும் வினாடி வினாக்கள் மூலம் பரிசுகளை வெல்லலாம். ஜியோ பயனர்கள் உற்சாகமான போட்டிகளில் பங்கேற்கலாம் தங்களுக்கு பிடித்த வீரர்கள் கையொப்பமிடப்பட்ட கிரிக்கெட் பேட்கள் மற்றும் பந்துகள், அணியின் உடை  போன்ற பல பொருட்களை தினமும் வெல்லலாம். ஜியோ பயனர்கள் எட்டு ஐபிஎல் அணிகளின் வீரர்களையும் சந்தித்து வாழ்த்துவதற்கான வாய்ப்பைப் பெறலாம். 

ALSO READ | தினம் ₹95 சேமித்தால் போதும்; விரைவில் லட்சாதிபதியாகலாம்ஜியோ ஐபிஎல் 2021 திட்டங்கள் விபரம்

ஜியோ பயனர்கள் இப்போது ஐபிஎல் அடிப்படையிலான குறிப்பிட்ட  ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வுசெய்ய முடியும். இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் ரூ.401 கட்டணத்தில் இருந்து ரூ .2,599 வரை பல திட்டங்கள் உள்ளப்ன. 

ரூ .2,599 1 ஆண்டு செல்லுபடியாகும் திட்டம். இந்த திட்டங்கள் அனைத்தும் நேரலையாக கிரிக்கெட் போட்டிகளைக் காண உதவும் Disney + Hotstar VIP  திட்டத்திற்கான இலவச வருடாந்திர சந்தாவை உள்ளடக்கியது. 

ரூ 199 மதிப்பிலான ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் 

அடிப்படை திட்டத்திற்கான ரூ .401 கட்டணத்தில், 28 நாட்கள் செல்லுபடியாகும். சந்தாதாரர்கள் அழைப்புகள் செய்ய வரம்புகள் ஏதும் இல்லை. ஒரு நாளைக்கு 3 ஜிபி தரவு மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்  கிடைக்கும். சலுகையின் ஒரு பகுதியாக, பயனர்கள் இந்த திட்டத்துடன் கூடுதல் 6 ஜிபி தரவைப் பெறுவார்கள். இரண்டாவது திட்டத்தின் கட்டணம் ரூ .598. இது 56 நாட்கள் செல்லுபடியாகும். சந்தாதாரர்கள் அழைப்புகள் செய்ய வரம்புகள் ஏதும் இல்லை. ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவு கிடைக்கும்.

ரூ .777 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும், அத்துடன் ஒரு நாளைக்கு 1.5 டேட்டாவுடன்,  வரம்பற்ற அழைப்புகளுடன் சந்தாதாரர்கள் அழைப்புகள் செய்ய வரம்புகள் ஏதும் இல்லை. இந்த திட்டத்துடன் 5 ஜிபி கூடுதல் தரவும் கிடைக்கும். ரூ .2,599 திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். மேலும்,  சந்தாதாரர்கள் அழைப்புகள் செய்ய வரம்புகள் ஏதும் இல்லை. ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவு கிடைக்கும். இதில் சந்தாதாரர்களுக்கு 10 ஜிபி கூடுதல் தரவும் கிடைக்கும்.

அனைத்து போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களிலும் ஐபிஎல் போட்டியை நேரலையாக காணலாம் என்று ஜியோ கூறுகிறது.

ALSO READ | தீராத பண பிரச்சனையா...கவலை வேண்டாம்.. இந்த நான்கு விஷயங்களை கடைபிடித்தால் போதும் ..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News