8th Pay Commission அடி தூள்: 44% ஊதிய உயர்வு... டிஏ உயர்வுடன் ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு ஜாக்பாட் செய்தி!!
8th Pay Commission Update: மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்து முக்கிய முடிவை எடுக்கலாம் என்று நம்பப்படுகிறது.
8வது ஊதியக் குழு, சமீபத்திய அப்டேட்: மத்திய மோடி அரசு சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியை அளித்தது. ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 4 சதவுகிதம் அதிகரிக்கப்பட்டது. இதைத் தோடர்ந்து அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 42 சதவிகிதத்திலிருந்து 46 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. இது ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். பண்டிகை காலத்தில் இது மிகப்பெரிய நல்ல செய்தியாக வந்துள்ளது.
இதனுடன் 2023 ஆம் ஆண்டிற்கான இரண்டு டிஏ விகிதங்களும் அறிவிக்கப்பட்டு விட்டன. இப்போது புதிய விகிதங்கள் ஜனவரி 2024 இல் அறிவிக்கப்படும். இது ஜூலை 2023 முதல் டிசம்பர் 2023 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. ஆனால் இதற்கு முன், 8வது ஊதியக் குழுவின் உருவாக்கம் இருக்கும் என்றும், அது அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தெர்தல்களுக்கு முன்னரே அறிவிக்கப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த விவாதங்களும் பரிசீலனைகளும் துவங்கியுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே நீண்ட காலமாக அடுத்த ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என ஊழியர் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
அகவிலைப்படி 50% ஆக உயரும்
8வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிடவில்லை. எனினும், சில காரணங்களால் இந்த அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதல் காரணம் 50% அகவிலைப்படி (Dearness Allowance). இதற்கும் எட்டாவது ஊதியக்குழுவிற்கும் என்ன தொடர்பு என காணலாம்.
மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை டிஏ -வை அதிகரிக்கிறது (DA Hike). இது ஏஐசிபியை குறியீட்டின் (AICPI Index) அடிப்படையில் செய்யப்படுகின்றது. இப்போது அடுத்த டிஏ அதிகரிப்பு 2024 ஆம் ஆண்டில் இருக்கும். கடந்த பல ஆண்டுகளாக மத்திய ஊழியர்களின் டிஏ 3% முதல் 4% வரை உயர்த்தப்பட்டுள்ளதால், 2024 ஜனவரியில் டிஏ விகிதங்கள் 4% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது நடந்தால், ஊழியர்களின் மொத்த அகவிலைபப்டி 50% -ஐ எட்டும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் படி அகவிலைப்படி 50% -ஐ எட்டினால், அது பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும். அதன் பிறகு அகவிலைப்படி அதிகரிப்பு மீண்டும் 0, 1, 2 சதவிகிதமாக அதிகரிக்கத் தொடங்கும். ஆனால், இந்த ஊதிய திருத்தம் ஏற்பட அடுத்த ஊதியக்குழு வருவது அவசியமாகும். ஆகையால், அதற்குள் எட்டாவது ஊதியக்குழு (8th Pay Commission) பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க | தமிழக பெண் குழந்தை உதவித்தொகை ரூ.50,000! விண்ணப்பிக்க அக்டோபர் 25 கடைசி நாள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
7வது சம்பள கமிஷன் (7th Pay Commission)
7வது சம்பள கமிஷன் 2013 இல் அமைக்கப்பட்டது, அதன் பரிந்துரைகள் 2016 இல் நடைமுறைப்படுத்தப்பட்டன. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்து முக்கிய முடிவை எடுக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது சாத்தியம் என்றே தோன்றுகிறது.
8வது ஊதியக்குழு அமல்படுத்தப்படுமா?
7வது ஊதியக் குழு 2013 ஆம் ஆண்டு அறிவிகப்பட்டு 2016ல் அமல்படுத்தப்பட்டது என்றும், அதே போல், அடுத்த ஊதியக்குழு இந்த ஆண்டு அல்லது 2024 -இன் துவக்கத்தில் அறிவிக்கப்பட்டு 2026 -க்குள் அமல்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அடுத்த ஊதியக் குழு அமைப்பது குறித்து அரசுக்கு இதுவரை எந்த யோசனையும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தெளிவுபடுத்திய போதிலும், அரசாங்கம் அத்தகைய முன்மொழிவைக் பரிசீலிக்கக்கூடும் என்றே தெரிகிறது. 2024 இல் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய ஊழியர்களுக்கு ஆதரவாக சம்பள உயர்வு தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை மோடி அரசு வெளியிடலாம் என ஊகங்கள் கிளம்பியுள்ளன. இதுவரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு அமலாக்கப்பட்டு வருகிறது. 8வது ஊதியக் குழு அமலுக்குப் பிறகு, ஊழியர்களின் (Central Government Employees) அடிப்படைச் சம்பளம் 44.44% உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க அமேசான்-மைக்ரோசாப்ட்-சிபிஐ ரெய்டு