8வது ஊதியக்குழு வருமா, வராதா? 186% ஊதிய உயர்வு கிடைக்குமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ
8th Pay Commission: 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், அடிப்படை ஊதியத்தை கணக்கிட பயன்படும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor) மாற்றப்படும். புதிய ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகின்றது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக பல அரசாங்க அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். அவற்றில் முக்கியமானது 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம். 8வது ஊதியக்குழுவை மத்திய அரசு விரைவில் அமைக்கும் என்று மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள். ஆனால், உண்மையான நிலை என்ன? 8வது ஊதியக் குழு வருமா, வராதா? இது தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Central Government Employees: கடும் அதிருப்தியில் மத்திய அரசு ஊழியர்கள்
8வது ஊதியக் குழுவை அமைப்பது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் சுமார் 1 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமலுக்கு வருகின்றன. 7வது ஊதியக்குழு (7th Pay Commission) 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில் 8வது உதியக்குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வர வேண்டும். அதற்கு இன்னும் 1 வருட காலமே உள்ள நிலையில், அரசு அதற்கான குழுவை இன்னும் அமைக்காமல் இருப்பது ஊழியர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
Performance Based Salary Hike: புதிய முறை அமலுக்கு வருமா?
இம்முறை அரசு ஊதியக் குழுவிற்கு பதிலாக மற்றொரு மாற்று வழியை அறிமுகம் செய்யக்கூடும் என ஒரு சாரார் கூறி வருகிறார்கள். புதிய ஊதியக் குழுவை அமைப்பதற்குப் பதிலாக, ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் செயல்திறனை ஒரு காரணியாக பயன்படுத்தலாம் என்று சில மூத்த அரசாங்க அதிகாரிகள் கூறுகிறார்கள். எனினும், இது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. செயல்திறன் அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படும் என்றால், இது தனியார் துறை நிறுவனங்களில் நடப்பது போல ஒவ்வொரு ஆண்டும் நடக்குமா என்ற கேள்வியும் உள்ளது. இந்த வழியை பின்பற்றினால், அரசாங்க அலுவலக செயல்முறைகளில் பல வித மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கும்.
தேசிய செயற்குழு கூட்டம்
இதற்கிடையில், அகில இந்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு எட்டாவது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தேசிய தலைவர் சுபாஷ் லம்பா, டிசம்பர் 28-29 தேதிகளில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தார். இந்த சந்திப்பின் போது 8வது ஊடியக்குழுவிற்கான போராட்டம் குறித்து வலுவான உத்தி உருவாக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நிலைப்பாடு
8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான எந்த முன்மொழிவுகளையும் அரசாங்கம் தற்போது மதிப்பீடு செய்யவில்லை என்று சமீபத்தில் மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியது. மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 8வது மத்திய ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று கூறினார். இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
Salary Hike: 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால் சம்பளம் எவ்வளவு உயரும்?
8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், அடிப்படை ஊதியத்தை கணக்கிட பயன்படும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor) மாற்றப்படும். புதிய ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகின்றது.
சம்பள உயர்வு:
- இப்போது, 7வது ஊதியக்குழுவிலிருந்து 8வது ஊதியக்குழுவிற்கு மாறும்போது, குறைந்தபட்ச அடிப்படை ஊதியமான ரூ.18,000, ரூ.51,480 ஆக அதிகரிக்கலாம்.
- ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக மாற்றப்பட்டால், இது சாத்தியமாகும்.
- இதனால், சுமார் 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
Pension Hike: ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
- ஊழியர்கள் மட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களுக்கும் இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
- ஓய்வூதியத்தில் 186% அதிகரிப்பும் சாத்தியமாகும்.
- தற்போது ரூ.9,000 ஆக உள்ள ஓய்வூதியம் ரூ.25,740 ஆக அதிகரிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ