அடி தூள்...ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் அதிரடி உயர்வு: அசத்தும் அடுத்த ஊதியக்கமிஷன்
8th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு அடுத்த ஊதிய கமிஷன் பற்றிய மகிழ்ச்சியான செய்தி விரைவிலேயே வரக்கூடும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8வது சம்பள கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: நீங்கள் ஒரு மத்திய அரசு பணியாளராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. கடந்த சில மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பல நல்ல செய்திகள் கிடைத்த வண்ணம் உள்ளன. தற்போது அடுத்த நல்ல செய்திக்கான நேரம் வந்துவிட்டது. அடுத்த ஊதியக்கமிஷன், அதாவது 8வது ஊதியக்கமிஷன் பற்றிய செய்திதான் அது. 8வது சம்பள கமிஷன் வந்தால் ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும். இந்த அப்டேட் தொடர்பான முழுமையான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
8வது ஊதியக்கமிஷன்
மத்திய ஊழியர்களுக்கு அடுத்த ஊதிய கமிஷன் பற்றிய மகிழ்ச்சியான செய்தி விரைவிலேயே வரக்கூடும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு அவர்களது ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். ஒரு சாரார் இது வெறும் வதந்திதான் என கூறிக்கொண்டிருக்க, மற்றொரு சாரார் இது தொடர்பான அனைத்து பணிகளையும் மத்திய அரசு செய்து வருவதாக கூறி வருகின்றனர். எனினும் அரசு தரப்பில் இருந்து இது குறித்த எந்த தெளிவான அறிவிப்பும் இன்னும் அளிக்கப்படவில்லை.
8th Pay Commission: விவாதம் நடக்கிறது, ஆனால் எந்த முன்மொழிவும் இல்லை
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, ஊழியர்களின் (Central Government Employees) சம்பளம் தொடர்பாக ஊதியக் குழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் சில விஷயங்ளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதில் இதுவரை எந்த முன்மொழிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
8வது ஊதியக்குழு எப்போது வரும்?
8வது ஊதியக் குழு குறித்து 2024 தேர்தலுக்குப் பிறகு முடிவெடுக்கப்படலாம் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் மற்றொரு தரப்போ தேர்தலுக்கு முன்னரே அரசு ஊழியர்களுக்கு இந்த நல்ல செய்தியை அளிக்கும் என தெரிவித்துள்ளது. 8வது ஊதியக்குழு 2024 -இல் அறிமுகம் ஆனால் 2026 -க்குள் நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கில் ரூ 490 டெபாசிட்! தீபாவளி பரிசு தரும் அரசு
அரசு கருத்தில் கொண்டுள்ள மாற்றங்கள்
8வது ஊதியக்குழுவின் உருவாக்கத்தோடு சில வழக்கமான முறைகளும் மாற்றப்படக்கூடும் என கூறப்படுகின்றது. பத்து வருடங்களுக்கு ஒரு முறை என்பதற்கு பதிலாக அரசு ஒவ்வொரு வருடமும் ஊழியர்களின் சம்பளத்தை மதிப்பாய்வு செய்ய ஆரம்பிக்கலாம் என்று ஊடகங்க அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. சம்பள திருத்தத்திற்காக (Salary Hike) ஊழியர்கள் 10 ஆண்டுகள் அதாவது நீண்ட காலம் காத்திருக்க வேண்டாம் என அரசு விரும்புகிறது. அவர்களின் பணித்திறன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சம்பளத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். 7வது ஊதியக் குழுவிலேயே (7th Pay Commission) இது பரிந்துரைக்கப்பட்டது. மேலும் சம்பளத்தை உயர்த்த ஊதியக்குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து அம்சங்களையும் மனதில் வைத்து அரசு ஒரு புதிய வழியில் திட்டமிட்டு வருகிறது. குறைந்த ஊதிய வரம்பில் இருக்கும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், அதிக வரம்பில் உள்ளவர்களுக்கு ஊதிய 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஊதிய பரீசலனை செய்யப்படக்கூடும் என கூறப்படுகின்றது. ஆனால், இதில் என்ன திட்டமிடப்பட்டது என்பது குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. தற்போது அரசும் இதைப்பற்றி எதையும் வெளிப்படையாகக் கூறவில்லை.
8வது ஊதியக்குழுவில் அடிப்படை சம்பளம் என்னவாக இருக்கும்?
8வது ஊதியக் குழுவில் ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor) 3.68 மடங்காக உயரக்கூடும். அதாவது ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 44.44 சதவீதம் அதிகரிக்கலாம். 7வது ஊதியக் குழுவின் கீழ், ஊழியர்கள் 2.57 (ஃபிட்மென்ட் பேக்டர்) அடிப்படையில் அடிப்படை சம்பளமாக ரூ.18 ஆயிரம் பெறுகின்றனர். இது 26 ஆயிரம் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கலாம்.
மேலும் படிக்க | HDFC வங்கியில் கடன் வட்டி விகிதங்கள் மாறியது! டெபாசிட்களுக்கான வட்டியும் மாறியது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ