கொரோனா காலத்தில் வேலை இழப்பு, சம்பள குறைப்பு அதிகம் இருந்ததா.. உண்மை என்ன..!!
CII-Talentonic HR Solutions கோவிட் -19 நெருக்கடி ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தியது.
கொரோனா தொற்று பரவல் தொடங்கியவுடன், மார்ச் மாதம் பொது ஊரடங்க்கு அறிவிக்கப்பட்டது. தொழில்கள் முடங்கின. இதனால், பெருமளவில் வேலை இழப்பு ஏற்படக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டது.
கோவிட் -19 (COVID-19) தொற்றுநோய்க்குப் பின்னர் பல துறைகளில் தாக்கம் இருந்தபோதிலும், வேலை இழப்பு மற்றும் சம்பளங்களைக் குறைப்பது போன்றவை எதிர்ப்பார்த்த அளவிற்கு அதிகம் இல்லை என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
CII-Talentonic HR Solutions கோவிட் -19 நெருக்கடி ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தியது.
அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் கொடுத்த பதிலின் அடிப்படையில், வேலை இழப்பு ஏழாவது இடத்தில் தான் உள்ளது.
கொரோனா (Corona) ஏற்படுத்திய பாதிப்பில், சம்பள குறைப்பு என்பது 13வது இடத்தில் உள்ளது.
நெருக்கடியைச் சமாளிக்க எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நிறுவனங்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது.
வருமானத்தில் கடுமையான தாக்கம் இருந்தபோதிலும், வேலை இழப்புக்கள் மற்றும் சம்பள குறைப்பு என்பது, எதிர்ப்பார்த்த அளவிற்கு அதிக அளவில் இல்லை என்பதையே இந்த ஆய்வறிக்கை காட்டுகிறது.
வீட்டிலிருந்து வேலை, அதாவது Work from Home பல சிக்கல்களைத் தீர்த்துள்ளது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் 250 நிறுவனங்கள் பங்கேற்றன.ஆய்வில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட உரையாடலில், பல நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதையில் செல்ல தொடங்கியுள்ளன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 250 நிறுவனங்கள் இதில் பங்கேற்றன, ஆகஸ்ட் பிற்பகுதியிலிருந்து நவம்பர் நடுப்பகுதி வரை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதிலிருந்து கொரோனா தாக்கத்திலும், நினைத்த அளவு பாதிப்பு இல்லை என்பதால், விரைவில் பொருளாதாரம் (Economy) இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ALSO READ | டிவி, பிரிட்ஜ் போன்ற பல Electronic பொருட்கள் விலை 40% அதிகரிக்கும்.. காரணம் என்ன!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR