இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவ அடையாள எண்ணான ஆதார் அட்டை இந்திய குடிமகன்களின் மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது.  அரசின் நலத்திட்டங்களை பெறவும், இன்னும் பிற பலன்களை பெறவும் ஆதார் அட்டை டிஜிட்டல் அடையாளச் சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.  யூஐடிஏஐ-ஆல் வழங்கப்படும் ஆதார் அட்டையில் உங்கள் பெயர், குடியிருப்பு முகவரி மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற்று இருக்கும். ஆதார் அட்டையில் நமது தனிப்பட்ட தகவல்கள் இருப்பதால் அந்த அடையாள ஆவணத்தை பத்திரமாக வைத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்று.  உங்கள் ஆதார் அட்டை உங்களுக்கே தெரியாமல் ஏதேனும் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிய யுஐடிஏஐ சிறப்பான அம்சத்தை வழங்கியுள்ளது.  யுஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'ஆதார் அங்கீகார வரலாறு' எனும் வசதியை பயன்படுத்தி கடந்த ஆறு மாதங்களில் தனிநபர் தனது ஆதார் அட்டையை பயன்படுத்தி செய்த செயல்முறைகளின் பதிவுகளை பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கார் திருடப்பட்டாலும் பைசா செலவில்லாமல் புதிய கார் வாங்கலாம்..! இதோ வழிமுறை


1) யுஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான uidai.gov.in என்பதற்கு சென்று, உங்களுக்கு விருப்பமான மொழியினை தேர்வு செய்யவேண்டும்.


2) இப்போது 'எனது ஆதார்' பகுதிக்குச் சென்றதும், திரையில் கீழே மெனு தோன்றும்.


3) ஆதார் சேவைகள் பிரிவின் கீழ் உள்ள 'ஆதார் அங்கீகார வரலாறு' என்பதைக் கிளிக் செய்யவும், இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கப்படும்.


4) உங்கள் ஆதார் எண் மற்றும் பாதுகாப்பு குறியீட்டைப் பயன்படுத்தி லாக் இன் செய்து, ஓடிபி பெறும் செயல்முறையை கிளிக் செய்ய வேண்டும்.


5) இப்போது ஓடிபி-யை நிரப்பி ப்ரொசீட் என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்யவேண்டும்.


6) உங்கள் ஆதார் அட்டையின் அனைத்து விவரங்களும் மற்றும் கடந்தகால அங்கீகார கோரிக்கைகளும் திரையில் தோன்றும்.


ஆதார் அங்கீகார வரலாறில் என்னென்ன தகவல்கள் இடம்பெற்றிருக்கும்?


1) அங்கீகார முறை.
2) அங்கீகாரத்தின் தேதி மற்றும் நேரம்.
3) யூஐடிஏஐ பதில் குறியீடு.
4) ஏயூஏ பெயர்
5) ஏயூஏ டிரான்ஸாக்ஷன் பரிவர்த்தனை ஐடி 
6) அங்கீகார பதில்
7) யூஐடிஏஐ பிழைக் குறியீடு


ஆதார் எண் வைத்திருப்பவர், கடந்த 6 மாதங்களில் ஏதேனும் அங்கீகாரப் பயனர் ஏஜென்சி அல்லது அவரால் செய்யப்பட்ட அனைத்து அங்கீகாரப் பதிவுகளின் விவரங்களையும் பார்க்கலாம்.  அதேசமயம் ஒரே நேரத்தில் ஒருவரால் அதிகபட்சமாக 50 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும்,  ஆதார் ஏதேனும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இருந்தால் அல்லது உங்கள் ஆதார் பயன்பாட்டில் சில முறைகேடுகள் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் 1947 அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.


மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ அரியர் பற்றிய முக்கிய அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ