எச்சரிக்கை: ஆதார் நம்பரில் OTP வரவில்லையா? மிகப்பெரிய ஆபத்து!

ஆதார் நம்பரில் ஓடிபி வரவில்லை என்றால் உங்கள் ஆதார் கணக்குடன் வேறு சில எண்கள் இணைக்கப்பட்டிருக்கலாம் என்பதும் ஒரு காரணமாகும்.   

Written by - RK Spark | Last Updated : Feb 9, 2023, 12:10 PM IST
  • டிரான்ஸாக்ஷனை நீங்கள் தான் செய்கிறீர்கள் என்பதை நிரூபிக்க ஓடிபி பயன்படுகிறது.
  • நிதி மற்றும் டிரான்ஸாக்ஷன்களை அங்கீகரிக்க ஆதார் அட்டை முக்கியமாக பயன்படுகிறது.
  • ஆதார் அட்டையுடன் எத்தனை எண்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை எளிதாக கண்டறியலாம்.
எச்சரிக்கை: ஆதார் நம்பரில் OTP வரவில்லையா? மிகப்பெரிய ஆபத்து! title=

இந்தியாவின் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை இருந்து வருகிறது, பல நிதி மற்றும் உத்தியோகபூர்வ டிரான்ஸாக்ஷன்களை அங்கீகரிக்க ஆதார் அட்டை முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.  இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (யூஐடிஏஐ) வழங்கப்படும் ஆதார் அட்டையில் குடிமகனின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண் மற்றும் முகவரி போன்ற அனைத்து தனிப்பட்ட விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.  யுஐடிஏஐ உடன் இணைக்கப்பட்ட உங்கள் எண்களுக்கு ஓடிபி அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.  

பொதுவாக ஓடிபி அனுப்பப்படுவதன் நோக்கம் இந்த டிரான்ஸாக்ஷனை நீங்கள் தான் செய்கிறீர்கள் என்பதை நிரூபிப்பதேயாகும்.  ஏதேனும் செயல்முறையின் போது நீங்கள் ஓடிபியை பெறவில்லை என்றால் மிகப்பெரிய ஆபத்தில் நீங்கள் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம். ஓடிபி வரவில்லை என்றால் உங்கள் ஆதார் கணக்குடன் வேறு சில எண்கள் இணைக்கப்பட்டிருக்கலாம் என்பதும் ஒரு காரணமாகும்.  இப்போது உங்கள் ஆதார் அட்டையுடன் எத்தனை எண்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை அறிய பின்வரும் படிநிலைகளை பின்பற்றுங்கள்.

மேலும் படிக்க | வாவ்..ரயில் பயணிகளுக்காக புதிய சேவையா? கட்டாயம் தெரிஞ்சிகோங்க 

1) tafcop.dgtelecom.gov.in என்கிற பக்கத்தில் உள்நுழைய வேண்டும்.

2) ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். 

3) கோரிக்கை ஓடிபி ஆப்ஷனை இணைக்க வேண்டும்.

4) உங்கள் தொலைபேசி எண்களுக்கு ஓடிபி அனுப்பப்படும். 

5) இப்போது உங்கள் தொலைபேசியில் பெறப்பட்ட ஓடிபி விவரங்களை உள்ளிட வேண்டும். 

6) உங்கள் ஆதார் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களின் எண்ணிக்கையை இப்போது உங்களால் பார்க்க முடியும்.

7) இதில் பட்டியலிடப்பட்ட எண்களில் ஏதேனும் பயன்பாட்டில் இல்லாத எண்கள் இருந்தாலோ அல்லது அதிலுள்ள எண்கள் உங்களுடையது இல்லை என்றாலோ இதுகுறித்து புகார் அளிக்க வேண்டும்.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: விதியில் மாற்றம், இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News