Aadhaar Card: தனியார் நிறுவனங்கள் மூலம் ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ள முன்மொழியப்பட்ட நடவடிக்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 15 நாட்களை இந்திய அரசு நீட்டித்துள்ளது.  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆதார் அங்கீகாரத்தை நடத்துவதற்கு அனுமதியளித்துள்ளது.  கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு மே 5-ம் தேதி வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது இது 15 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகளுக்கு வெளியே உள்ள நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளில் ஆதார் சரிபார்ப்புக்கு இப்போது ஒப்புதல் பெறலாம் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய அப்டேட்: உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு


 


 


ஆதார் அங்கீகரிப்பைச் செயல்முறையை நடத்த விரும்பும் நிறுவனங்கள் கோரிக்கைகளுடன் முழுமையான விவரங்களை வழங்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.  அத்தகைய நிறுவனங்கள் ஒரு விரிவான முன்மொழிவை முன்வைக்க வேண்டும், காரணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்துவது பொதுமக்களின் நலன் சார்ந்தது என்று சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது அரசுத் துறை தீர்மானித்தால், அந்தக் கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்த முன்மொழிவு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கும் அனுப்பப்பட வேண்டும்.


அரசின் நலன் கருதி பயனாளர்களை அடையாளம் காண ஆதார் எண்களைப் பயன்படுத்த முடியும் என்றாலும், தனியார் நிறுவனங்கள் ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளது.  டாடா, மஹிந்திரா, அமேசான் மற்றும் ஹீரோ உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கு ஆதார் எண்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் அடையாளங்களைச் சரிபார்க்கவும் மற்றும் பிற அத்தியாவசியத் டேட்டாக்களை அங்கீகரிக்கவும் நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.  இந்த நிறுவனங்களில் கோத்ரேஜ் ஃபைனான்ஸ், அமேசான் பே (இந்தியா) பிரைவேட் லிமிடெட், ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் சொல்யூஷன்ஸ், ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ், மஹிந்திரா ரூரல் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட், யூனிஆர்பிட் பேமெண்ட் சொல்யூஷன்ஸ் லிமிடெட் மற்றும் எஸ்வி கிரெடிட்லைன் லிமிடெட் ஆகியவை அடங்கும்.


அதே சமயம் மத்திய அரசு இந்திய குடிமகன்களை ஆதாருடன் பான் கார்டை இணைக்க வலியுறுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே.  கடந்த ஆண்டிலிருந்து மக்களை ஆதாருடன் பான் கார்டை இணைக்கக்கோரி அரசு கூறிவந்தது, ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க மார்ச் 31, 2023 தான் கடைசி தேதி என்று அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 30, 2023 வரை அரசு நீட்டித்துள்ளது.  இதுவரை பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் அரசு விதித்துள்ள காலக்கெடுவுக்குள் ஆதார்-பான் இணைப்பு செயல்முறையை செய்து முடித்திட வேண்டும், இல்லையென்றால் அவர்களின் பான் கார்டு செயலிழந்துவிடும்.


மேலும் படிக்க | EPFO Higher Pension: அதிக ஓய்வூதியம் குறித்து அரசு அளித்த மிகப்பெரிய அப்டேட்


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ