அதிரடி ஆபர்! Samsung Galaxy Z Flip 3 வெறும் ரூ.16,750க்கு ப்ளிப்கார்ட்டில் விற்பனை!

Samsung Galaxy Z Flip 3: ப்ளிப்கார்ட் விற்பனையில், ரூ.33,249 விலைகொண்ட சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் 3 ஆனது தற்போது தள்ளுபடிக்குப் பிறகு ரூ.16,750க்கு விற்பனைக்கு கிடைக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : May 10, 2023, 08:52 AM IST
  • சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் 3 மொபைலின் விலை ரூ.49,999 ஆகும்.
  • ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்துவர்களுக்கு ரூ.4,999 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
  • எக்ஸ்சேஞ் சலுகையில் ரூ.28,250 வரை தள்ளுபடி வழங்குகிறது.
அதிரடி ஆபர்! Samsung Galaxy Z Flip 3 வெறும் ரூ.16,750க்கு ப்ளிப்கார்ட்டில் விற்பனை!  title=

Samsung Galaxy Z Flip 3: சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் 3 ஆனது ப்ளிப்கார்ட் அதிரடி ஆபர்களில் மிகவும் குறைவான விலைகளில் கிடைக்கிறது.  நாட்டில் இன்றுவரை மிகவும் பிரபலமாக இருந்துவரும் எளிதில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் ஒன்று தான் சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேகமான தயாரிப்பான சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் 3 5ஜி மொபைலாகும்.  கடந்த சில முன்னர் வெளியிடப்பட்ட மூன்றாம் தலைமுறை சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் ஆனது பல்வேறு அட்டகாசமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.  சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் 3 மொபைல் ரூ.84,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.  இவ்வளவு விலையுயர்ந்த இந்த மடிக்கக்கூடிய மொபைல், இப்போது இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட்டில் வெறும் ரூ.16,750க்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் சலுகைக்கால விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கு சிறப்பிப்பன தள்ளுபடிகளை வழங்குகிறது.

மேலும் படிக்க | அமேசான் கிரேட் ஆஃபர்..! ஸ்மார்ட் டிவிக்களுக்கு சிறப்பு தள்ளுபடி.. குறைந்த விலையில் வாங்கலாம்

 

ப்ளிப்கார்ட் விற்பனையில், ரூ.33,249 விலைகொண்ட சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் 3 ஆனது தற்போது தள்ளுபடிக்குப் பிறகு ரூ.16,750க்கு விற்பனைக்கு கிடைக்கிறது.  சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் 3 மொபைலின் விலை ரூ.49,999 ஆகும், இது அதிகாரப்பூர்வ விலையை விட ரூ.46,000 குறைவு.  ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி சாம்சங் மொபைலை வாங்குபவர்களுக்கு ரூ.4,999 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.  இந்த கேஷ்பேக் ஆஃபரின் மூலம் மொபைலின் விலை ரூ.45,999 ஆக குறைகிறது. இதுதவிர பிளிப்கார்ட் நிறுவனம் கூடுதலாக பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து புதிய சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் 3 மொபைலை வாங்குபவர்களுக்கு ரூ.28,250 வரை தள்ளுபடிகளை வழங்குகிறது.  அனைத்து வங்கிச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுக்குப் பிறகு, சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் 3 மொபைலானது ப்ளிப்கார்ட் விற்பனையில் ரூ.33,249 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.16,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.

samsung

சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் 3 மொபைல் 6.7-இன்ச் முழு ஹெச்டி + டிஸ்ப்ளே மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி ஸ்டோரேஜுடன், ஆக்டா-கோர் குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 888 செயலி மூலம் இயக்கப்படுகிறது.  சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் 3 ஆனது இரட்டை 12எம்பி பின்புற கேமரா அமைப்பையும், வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபிக்கள் எடுப்பதற்கு வசதியாக முன்பக்கத்தில் 10எம்பி கேமராவையும் கொண்டுள்ளது.  மேலும் சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் 3 மொபைல் 3300எம்ஏஹெச் லித்தியம் அயன் பேட்டரியை கொண்டுள்ளது.

மேலும் அமேசான் கிரேட் கோடைகால விற்பனையில் தொலைக்காட்சிகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழைய டிவியை மாற்றும் திட்டம் உங்களுக்கு இருந்தால் இதுவே சிறந்த நேரம். இந்த விற்பனையின் போது, ​​உயர் தெளிவுத்திறன் கொண்ட 4K டிவிகள் மற்றும் நடுத்தர மற்றும் பட்ஜெட் பிரிவு OLED டிவிகளில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கும். அமேசானில் நடந்துவரும் இந்த சிறப்பு விற்பனையின் போது சோனி, சாம்சங், வூ, எல்ஜி மற்றும் பிற பிராண்டுகளின் டிவிகளை குறைந்த விலையில் வாங்கலாம். இதனுடன், ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். அமேசானில் ஸ்மார்ட் டிவியில் கிடைக்கும்.

மேலும் படிக்க | Oppo Reno 7 5G போனிற்கு பிளிப்கார்ட் வழங்கும் அசத்தலான சலுகை! மிஸ் பண்ணாதீங்க!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News