இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் இந்திய குடிமக்களுக்கு முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.  ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் கருவிழி, கைரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்கள் இடம்பெற்று இருக்கும்.  பல அரசு மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்கு ஆதார் அட்டை அவசியம்.  ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் பிடிக்கவில்லையென்றால் அதனை நாம் மாற்றிக்கொள்ளலாம் அல்லது முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் போன்ற ஏதேனும் ஒன்றை அப்டேட் செய்ய வேண்டுமென்றாலும் நீங்கள் செய்துகொள்ளலாம்.  இதுதவிர கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களையும் நீங்கள் அப்டேட் செய்துகொள்ளலாம்.  இந்திய குடிமக்களின் முக்கியமான அடையாள ஆவணமாக இருக்கும் ஆதார் அட்டையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.  ஆதார் அட்டை காணாமல் போய்விட்டால் அது பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும்.
யூஐடிஏஐ எனும் ஆன்லைன் தளம், தனிநபர்கள் தங்கள் ஆதார் எண்ணை மீட்டெடுக்கவும், அவர்களின் ஆதார் அட்டையின் நகலை டவுன்லோடு செய்யவும் உதவுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | LIC Jeevan Tarun Policy: வெறும் ரூ.171 முதலீட்டில் ரூ. 28.24 லட்சம் பெறலாம்!


ஆதார் அட்டையை மீட்டெடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்:


1) உங்கள் ஆதார் எண் அல்லது என்ரோல்மெண்ட் ஐடி அல்லது விர்ச்சுவல் ஐடி
2) பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண், மின்னஞ்சல் ஐடி 
3) பிறந்த தேதி


ஆதார் அட்டையை மீட்டெடுப்பதற்கான படிகள்:


1) https://uidai.gov.in அல்லது https://resident.uidai.gov.in என்கிற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.


2) "ஆதார் அட்டையை ஆர்டர் செய்" சேவைக்குச் செல்ல வேண்டும்.


3) 12 இலக்க தனித்துவ அடையாள எண், 16 இலக்க மெய்நிகர் அடையாள எண் அல்லது 28 இலக்க பதிவு எண்ணை உள்ளிட வேண்டும்.


4) திரையில் காட்டப்படும் விவரங்களையும், பாதுகாப்புக் குறியீட்டையும் உள்ளிட வேண்டும்.


5) பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி பெற வேண்டும்.


6) உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு எண்ணைப் பெறுவீர்கள்.


7) மீண்டும் யூஐடிஏஐ சுய சேவை போர்ட்டலுக்குச் சென்று "ஆதாரைப் பதிவிறக்கு" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.


ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் ஆதார் அட்டையை மீட்டெடுத்தல்:


1) https://resident.uidai.gov.in/lost-uideid-க்குச் செல்ல வேண்டும்.


2) உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு சேவையின் ஓடிபி வழங்கப்படுகிறது.


3) பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது அஞ்சல் ஐடியில் உங்கள் ஆதார் எண்ணைப் பெறுவீர்கள்.


யூஐடிஏஐ ஹெல்ப்லைன் மூலம் ஆதார் அட்டை மீட்டெடுத்தல்:


1) யூஐடிஏஐ உதவி எண்- 1800-180-1947 அல்லது 011-1947 என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும்.


2) உங்கள் ஆதார் அட்டையை மீட்டெடுக்க தேவையான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


3) உங்கள் எல்லா விவரங்களையும் உள்ளிட வேண்டும்.


4) இப்போது நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது அஞ்சல் ஐடியில் ஆதார் எண்ணைப் பெறுவீர்கள்.


5) உங்கள் ஆதார் அட்டையின் நகலைப் பதிவிறக்க யூஐடிஏஐ சுய-சேவை போர்ட்டலைப் பார்வையிட வேண்டும்.


மேலும் படிக்க | LIC Bima Ratna : நாள் ஒன்றுக்கு ரூ.138 முதலீட்டில், ரூ.13.5 லட்சம் வரை அள்ளலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ