7th Pay Commission ஜாக்பாட் செய்தி: அடிப்படை ஊதியத்தில் அதிரடி ஏற்றம், ஊழியர்கள் ஹேப்பி

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மாஸான செய்தி உள்ளது. விரைவில் அவர்களது ஊதியத்தில் பம்பர் உயர்வு ஏற்படப்போகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 16, 2023, 05:40 PM IST
  • அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்தில் இணைப்பதால் சம்பளம் அதிகரிக்கும்.
  • ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?
  • அடிப்படை சம்பளம் எப்போது உயரும்?
7th Pay Commission ஜாக்பாட் செய்தி: அடிப்படை ஊதியத்தில் அதிரடி ஏற்றம், ஊழியர்கள் ஹேப்பி title=

அகவிலைப்படி உயர்வு சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியின் முந்தைய உயர்வு மார்ச் 2023 இல் அறிவிக்கப்பட்டது. அப்போது அரசு அகவிலைப்படியை 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தியது. இப்போது அடுத்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். எனினும், செப்டம்பர் மாதத்துக்குள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்படுகிறது. பணவீக்க விகிதத்தில் டிஏ அதிகரிப்பால், சம்பளத்தில் நல்ல உயர்வு இருக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர், பணி மதிப்பீடு (அப்ரெய்சல்) ஆகியவற்றின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கும் போது சம்பளம் தானாகவே அதிகரிக்கும். எனினும், தற்போது ஃபிட்மென்ட் பேக்டர் மற்றும் அப்ரைசல் ஆகியவற்றை கணக்கிடாமலேயே ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்தில் இணைப்பதால் சம்பளம் அதிகரிக்கும்

7வது ஊதியக் குழுவை 2016ல் மத்திய அரசு அமல்படுத்தியது. அப்போது அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்பட்டது. பூஜ்ஜிய அகவிலைப்படி காரணமாக, ஊழியர்களின் முந்தைய அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்பட்டது. இப்போது மீண்டும் இந்த நிலை வரப்போகிறது. இதன் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயில் இருந்து 27,000 ரூபாயாக உயரும். அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளத்துடன் இணைப்பதால் அடிப்படைத் தொகை அதிகரிக்கும்.

சம்பள உயர்வுக்காக நீண்ட காத்திருப்பு

அகவிலைப்படி (டிஏ) 50 சதவீதமாக அதிகரிக்கும்போது அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் என்று 2016 ஆம் ஆண்டு குறிப்பாணையில் எழுதப்பட்டுள்ளது. தற்போது பெறப்படும் அகவிலைப்படி 42 சதவீதமாகும். இது பூஜ்ஜியமாக்கப்பட்டவுடன் மீண்டும் 1 சதவீதம், 2 சதவீதத்தில் இருந்து தொடங்கும். அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியவுடன் அது அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். இதனால், சம்பள உயர்வுக்காக ஊழியர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.

மேலு படிக்க | 7th Pay Commission: விரைவில் 50% டிஏ, ஊழியர்களின் ஊதியம் அதிரடி ஏற்றம் காணும்

ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?

தற்போது பே பேண்ட் லெவல்-1 ஊழியர்கள் ரூ. 18,000 அடிப்படை சம்பளம் பெறுகிறார்கள். தற்போது, ​​7,560 ரூபாய் அகவிலைப்படி இதில் கிடைக்கிறது. ஆனால், அகவிலைப்படி 50 சதவீதம் ஆனவுடன் இந்தத் தொகை ரூ. 9,000 ஆக உயரும். அகவிலைப்படி 50 சதவிகிதமானால், அது பூஜ்ஜியமாக்கப்பட்டு அந்த தொகை அடிப்படை சம்பளத்துடன் கேர்க்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. அதாவது தற்போதைய அடிப்படை சம்பளம் ரூ. 18,000 -லிருந்து ரூ. 27,000 ஆக உயரும். இதற்குப் பிறகு, அகவிலைப்படியானது ரூ. 27,000 அடிப்படை சம்பளத்தில் கணக்கிடப்படும்.

அடிப்படை சம்பளம் எப்போது உயரும்?

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீத அகவிலைப்படியின் படி சம்பளம் வழங்கப்படுகிறது. ஜூலை 2023 இன் திருத்தத்திற்கு பிறகு, இது 4 சதவீதம் அதிகரித்து 46 சதவீதமாக உயரும் என நம்பப்படுகின்றது. இதற்குப் பிறகு, 2024 ஜனவரியிலும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்தால், மொத்த அகவிலைப்படி 50 சதவீதமாக மாறும். இது 50% -ஐ எட்டினால், 2024 ஜனவரி முதல் அகவிலைப்படி பூஜ்ஜியமாகிவிடும். அதாவது, ஜூலை 2024 முதல், ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அடிப்படை சம்பளத்தின் பலன் கிடைக்கும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு அகவிலைப்படியும் கிடைக்கும். அடிப்படை சம்பளம் அதிகரித்தால், அதன் படி, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற இன்னும் பல கொடுப்பனவுகளிலும் ஏற்றம் இருக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission மாஸ் செய்தி: விரைவில் பம்பர் சம்பள ஏற்றம்... இதுதான் காரணம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News