Aadhar card rules: ஒருவர் தனது பணி நிமித்தம் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ பலமுறை வீட்டை மாற்ற வேண்டிய மாற்ற வேண்டியுள்ளது, அத்தகைய சூழ்நிலையில் நமது ஆதார் அட்டையில் உள்ள முகவரியையும் மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது.  அதேசமயம் உங்கள் ஆதார் அட்டையில் உள்ளிடப்பட்ட முகவரியில் ஏதேனும் சிறிய மாற்றம் செய்யப் போகிறீர்கள் என்றால் அதனை ஒருமுறை மட்டுமே முகவரியை மாற்ற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  ஆதார் அட்டை இந்திய குடிமகன்களின் முக்கியமான அடையாள ஆவணமாக இருந்து வருகிறது, மற்ற ஆவணங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை இருப்பதால் இதனை நாம் கவனமாக கையாள வேண்டும்.  ஆதார் அட்டை இல்லாமல் நம்மால் இப்போது எந்தவிதமான பணியையும் செய்யமுடியாது என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்... 7ஆவது ஊதியக்குழுவின் கீழ் சம்பள உயர்வு - அறிவிப்பை வெளியிட்ட அரசு!


ஆதார் அட்டை இல்லாவிட்டால் பல அரசுத் திட்டங்களில் இருந்து வரும் சலுகைகளை நாம் இழக்க நேரிடும்.  ஆதார் அட்டையின் தேவைகள் மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பல முறை மாற்றங்களைச் செய்வது அல்லது அதனை அப்டேட் செய்ய வேண்டியது அவசியம்.  இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதார் அட்டையில் தேவையான மாற்றங்களைச் செய்ய அனுமதிக்கிறது.  ஆனால் அதற்காக நாம் ஆதார் அட்டையில் மீண்டும் மீண்டும் மாற்றத்தை செய்துகொள்ளலாம் என்று நினைப்பது தவறு.  ஆதார் அட்டையை மாற்றுவதற்கு அல்லது அப்டேட் செய்வதற்கு யுஐடிஏஐ ஒரு வரம்பை நிர்ணயித்துள்ளது, அந்த வரம்பை மீறி ஆதார் அட்டையில் நீங்கள் மாற்றங்களைச் செய்ய முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  


சிலருக்கு ஆதார் அட்டையிலுள்ள பெயர் தவறாக இருக்கலாம் அல்லது திருமணத்திற்குப் பிறகு, பெண்கள் தங்கள் ஆதாரில் குடும்பப் பெயரை மாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.  ஆதாரில் உள்ள பெயரை நீங்கள் இரண்டு முறை மட்டுமே திருத்தலாம் அல்லது அப்டேட் செய்யலாம்.  இரண்டு தடவைக்கும் மேலும் நீங்கள் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் யுஐடிஏஐ-ன் பிராந்திய அலுவலகத்திற்குச் சென்று அங்கு சில முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க | 8th Pay commission: 8-வது ஊதியக் குழு அமல்படுத்தினால் ஊழியர்களுக்கு இவ்வளவு நன்மைகளா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ