புதிய சேவையான ஐஏஎன்எஸ் நிறுவனத்தில் அதானி குழுமம் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியுள்ளது. இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானிக்கு சொந்தமான AMG மீடியா நெட்வொர்க்குகள், நியூஸ் வயர்ஸ்-சேவை நிறுவனமான ஐஏஎன்எஸ் மீது செயல்பாட்டுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். அதானி குழுமம், அதன் மீடியா துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் லிமிடெட் (ஏஎம்என்எல்) மூலம் நியூஸ் வயர்ஸ்-சேவை நிறுவனமான ஐஏஎன்எஸ்-ல் 50.5 சதவீத பங்குகளை வாங்கியதாக  ஒழுங்குமுறை தாக்கல் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒழுங்குமுறை தாக்கல் அறிக்கை


இது தொடர்பாக வெளியான ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில், கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம்- அதன் துணை நிறுவனமான "AMG Media Networks Ltd ஐஏஎன்எஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் ஈக்விட்டி பங்குகளை உள்ளடக்கிய 50.50 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க், ஐஏஎன்எஸ் மற்றும் அதன் பங்குதாரர் சந்தீப் பாம்சாய் ஆகியோருடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தெரியவந்துள்ளது. செய்தி சேவை நிறுவனம் 2022-23 நிதியாண்டில் ரூ. 118 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | 1 ரூ.கோடி டர்ன்-ஓவர் செய்யும் விவசாயி! மத்திய அரசின் Billionaire award பெறும் ரமேஷ் நாயக்


அதானி குழுமம், டிசம்பர் 15, 2023 அன்று, IANS இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நியூஸ்-வயர் நிறுவனத்தில் 50.5 சதவீதப் பங்குகளை ₹5.1 லட்சத்திற்கு வாங்கியுள்ளதாக அறிவித்தது, இது ஊடகத் துறையில் தனது இருப்பை அதானி குழுமம் மேலும் வலுவாக்கியுள்ளது.


இனிமேல், IANS இன் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகம், AMG மீடியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும், மேலும் இயக்குநர்கள் குழுவில் இயக்குநர்களின் நியமனத்தையும் ஏஎம்ஜி மீடியா செய்யலாம். IANS, இந்தோ-ஆசிய செய்தி சேவை, வட அமெரிக்காவில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோருக்கு சேவை செய்வதற்காக 1986 இல் நிறுவப்பட்டது.


1970 களில், இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கு அதன் கவனத்தை மாற்றி, முழு அளவிலான கம்பி சேவையாக மாறியது. ஐஏஎனெஸ் நிறுவனம் FY23 இல் ₹12 கோடியும், FY22ல் ₹9.4 கோடியும், FY21ல் ₹10.3 கோடியும் விற்றுமுதல் செய்ததாக அறிவித்தது.


வணிக மற்றும் நிதிச் செய்தி டிஜிட்டல் மீடியா தளமான BQ Prime ஐ இயக்கும் Quintillion Business Media ஐ வாங்கியபோது, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதானி ஊடக வணிகத்தில் நுழைந்தார். அதன்பிறகு டிசம்பரில் என்டிடிவியில் கிட்டத்தட்ட 65 சதவீத பங்குகளை வாங்கியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | உலகப் பணக்காரர் பட்டியலில் 7 நாட்களில் 7 இடங்கள் முன்னேறிய கெளதம் அதானி


தற்போது, அதானி குழுமத்திடம் மூன்று மீடியா திட்டங்கள் உள்ளன. அவை NDTV நெட்வொர்க், குயின்டிலியன் பிசினஸ் வணிக மற்றும் நிதிச் செய்தி டிஜிட்டல் மீடியா தளமான BQ Prime மற்றும் இப்போது ஐஏஎன்எஸ்.


அதானி குழுமம் அடுத்த தசாப்தத்தில் உள்கட்டமைப்பிற்காக ₹7 டிரில்லியன் ($84 பில்லியன்) செலவழிக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர்கள் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட குற்றச்சாட்டுகளே அதானி குழுமத்தின் இழப்புக்கு அடிப்படையாக இருந்தது.


அதன்பின்னர் மீண்டெழுந்த இந்திய பில்லியனர் கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி எண்டர்பிரைசஸ், இந்தியாவில் NDTV செய்தி நெட்வொர்க் மற்றும் குயின்டிலியன் பிசினஸ் போன்ற ஊடகங்களில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளது. ஊடகங்களைத் தவிர, குழு உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது.  


மேலும் படிக்க | கோவிட்-19 கேரளாவில் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் நிலைமை மோசமாகிறது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ