அகமதாபாத்: ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளின்போதும், மெளனம் காத்த அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பல மாதங்களுக்குப் பிறகு, அந்த அறிக்கை தொடர்பாக தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை "இலக்கு வைக்கப்பட்ட தவறான தகவல் மற்றும் மதிப்பிழந்த குற்றச்சாட்டுகளின் கலவை" என்று கடுமையாக சாடியுள்ளார் கெளதம் அதானி.
அதானி குழுமத்தின் 31வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் (AGM) 2023 உரையாற்றிய கெளதம் அதானி, "இந்த அறிக்கையானது இலக்கு வைக்கப்பட்ட தவறான தகவல் மற்றும் மதிப்பிழந்த குற்றச்சாட்டுகளின் கலவையாகும், அவற்றில் பெரும்பாலானவை 2004 முதல் 2015 வரையிலானவை. அவை அனைத்தும் அந்த நேரத்தில் உரிய அதிகாரிகளால் தீர்க்கப்பட்டன. இந்த அறிக்கை வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் முயற்சியாகும், இது நமது நற்பெயரை சேதப்படுத்துவதையும், எங்கள் பங்குகளின் விலைகளை குறுகிய காலத்தில் குறைத்து அதன் மூலம் லாபம் ஈட்டுவதையும் நோக்கமாகக் கொண்டது” என்று கூறினார்.
VIDEO | "The report was a combination of targeted misinformation and miscredited allegations. This report was a deliberate and a malicious attempt aimed at damaging our reputation," says Gautam Adani on Hindenburg Research report at the Adani Enterprises AGM. pic.twitter.com/BrbmZmCmh2
— Press Trust of India (@PTI_News) July 18, 2023
வீடியோ செய்தியில் இந்த கருத்தை தெரிவித்த கவுதம் அதானி, “அதைத் தொடர்ந்து, முழு சந்தா பெற்ற FPO இருந்தபோதிலும், எங்கள் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பணத்தை அவர்களுக்குத் திருப்பித் தர முடிவு செய்தோம். நாங்கள் உடனடியாக ஒரு விரிவான மறுப்பை வெளியிட்டாலும், குறுகிய விற்பனையாளரின் உரிமைகோரல்களை பல்வேறு சுயநலவாதிகள் பயன்படுத்திக் கொள்ள முயன்றனர். இந்த நிறுவனங்கள் பல்வேறு செய்திகள் மற்றும் சமூக ஊடக தளங்களில் தவறான கருத்துகளை பரப்பி அவற்றை ஊக்குவித்தன " என்று அவர் கூறினார்.
ஹிண்டன்பர்க் அறிக்கை
இந்த ஆண்டு ஜனவரி 24 அன்று வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையில், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மீது குற்றஞ்சாட்டி ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை தாக்கல் செய்தது. அவரின் வளர்ச்சி குறித்தும், பங்குச்சந்தைகளில் முதலீடுகள் குறித்தும் அந்த அறிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இதற்கு, அதானி தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டாலும், பங்குச்சந்தைகளில் அதானி குழுமத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
SEBI, SC மற்றும் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு
செபி மற்றும் உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு இந்த விவகாரத்தை விசாரித்தது. அந்தக் குழு தனது அறிக்கையை இந்த ஆண்டு மே மாதம் பகிரங்கப்படுத்தியது. வெளியிடப்பட்ட 173 பக்க அறிக்கையில், செபியின் தரவுகளின் அடிப்படையில், பங்கு விலை செங்குத்தாக உயர்ந்த நிலையில், "எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை" என்று நீதிமன்றக் குழு கூறியது.
ஜனவரியில் எழுந்த பிரச்சனைகளுக்குப் பிறகு, அதானி குழுமத்தின் முதலீட்டாளர் GQG பார்ட்னர்கள் மீண்டும் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ய முடிவெடுத்து, கடந்த மார்ச் மாதத்தில், அதானி எண்டர்பிரைசஸ் (AEL), அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகியவற்றில் ரூ.15,446 கோடி முதலீடு செய்துள்ளனர்.
மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்க திட்டமா... EMI சுமையை குறைக்க சில டிப்ஸ்!
ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி, அதானி குழுமத்தை அம்பலப்படுத்திய நேரத்தில் இந்த முதலீடு செய்யப்பட்டது. இப்போது மீண்டும் குறிப்பிட்ட தொகையை அதானிக்கு முதலீடு செய்ய அந்தக் குழு முடிவெடுத்திருக்கிறது.
இன்று பங்குதாரர்களிடம் உரையாற்றிய அதானி, உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவியது என்று கூறினார்.
"இது நமது குழுமத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தியது மற்றும் விதிமீறல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தது. அதே வேளையில், எங்கள் நிர்வாகம் மற்றும் வெளிப்படுத்தல் தரநிலைகளில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்வோம் என்பது எனது உறுதியான நிலைப்பாடாகும். எங்கள் சாதனைப் பதிவு ஒவ்வொரு நாளும் இந்த உண்மையை உணர்த்திக் கொண்டே இருக்கும்" என தொழிலதிபர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
ஹிண்டன்பர்க் எபிசோடிற்குப் பிறகும், குழு உலக முதலீட்டாளர்களிடமிருந்து பல பில்லியன்களைத் தொடர்ந்து திரட்டியது என்றும், இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ எந்த மதிப்பீட்டு நிறுவனங்களும் அதானி குழுமத்தின் மதிப்பீட்டைக் குறைக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய தொழிலதிபர் கெளதம் அதானி, இந்தியாவின் வளர்ச்சியையும் பாராட்டிப் பேசினார்.
மேலும் படிக்க | பிரம்மாண்டமான ரியல் எஸ்டேட் நிறுவனம் எவர்கிராண்டே நஷ்டம் எவ்வளவு? $96 பில்லியன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ