உலகப் பணக்காரர் பட்டியலில் 7 நாட்களில் 7 இடங்கள் முன்னேறிய கெளதம் அதானி

Net Worth Of Gowtam Adani: இந்திய தொழிலதிபர் கெளதம் அதானிக்கு தொடர்ந்து மகிழ்ச்சியான செய்தி கிடைத்து வருகிறது, ஒரே வாரத்தில் அவரது சொத்து மதிப்பு  10 பில்லியன் டாலர் அளவில் உயர்ந்தது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 6, 2023, 09:02 AM IST
  • கெளதம் அதானியின் சொத்து மதிப்பு
  • ஒரே வாரத்தில் 10 பில்லியன் டாலர் அளவில் உயர்ந்த சொத்து மதிப்பு
  • இந்தியத் தொழிலதிபரின் சொத்து மதிப்பு
உலகப் பணக்காரர் பட்டியலில் 7 நாட்களில் 7 இடங்கள் முன்னேறிய கெளதம் அதானி title=

புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ஏழே நாட்களில் 10 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இதனால், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 10 நாட்களுக்கு முன்னர் 23-25 வது இடத்தில் இருந்த அதானி, தற்போது உலகின் 16வது பெரும் பணக்காரராக உள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் உலகப் பணக்காரர் பட்டியலில் 7 நாட்களில் 7 இடங்களில் முன்னேறியுள்ளார் கெளதம் அதானி.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு

ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் உலகப் பணக்காரர் பட்டியலில் இப்போது 70.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 16வது இடத்தில் அதானி குழுமத்தின் தலைவர் இருப்பதாக ப்ளூம்பெர்க் அறிவித்துள்ளது. இந்தியர்களில், கௌதம் அதானிக்குப் போட்டியாக  13வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 90.4 பில்லியன் டாலர்ஆகும். கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரே வாரத்தில் ரூ.83000 கோடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் டாப் 20 பட்டியல்

தற்போது, ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் டாப் 20 பட்டியலில் இருக்கும் இரண்டு இந்தியர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் 7 நாளில் ரூ.83000 கோடி சம்பாதித்த கௌதம் அதானியின் திடீர் முன்னேறத்திற்கு காரணம் என்ன?

மேலும் படிக்க | 1 ரூ.கோடி டர்ன்-ஓவர் செய்யும் விவசாயி! மத்திய அரசின் Billionaire award பெறும் ரமேஷ் நாயக்

அதானி குழுமத்தின் பங்குகள்

அதானி குழுமத்தின் பங்குகள் 20 சதவீதமாக உயர்ந்ததுள்ளது. இதற்கு முக்கியமான காரணம், அமெரிக்கச் சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகம் (DFC) சமீபத்தில் தான் இலங்கையில் துறைமுகம் அமைப்பதற்காக, அதானி போர்ட் நிறுவனத்திற்கு 533 மில்லியன் டாலர் நிதியுதவியைக் கொடுத்தது. 

அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர்கள் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட ஒரு செய்தியில் இருந்த குற்றச்சாட்டுகளே அதானி குழுமத்தின் இழப்புக்கு அடிப்படையாக இருந்தது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் 

விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருந்த மோசமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அது சரியானதில்லை என்று கண்டறியப்பட்ட பிறகே, கடன் வழங்கப்பட்டதாக சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகம் DFC அதிகாரி ஒருவர் Bloomberg இடம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | மிக்ஜாம் புயலின் கோர ஆட்டம்... ஊர் முழுக்க தண்ணீர் - சென்னையின் இப்போதைய நிலை என்ன?

அதானி குழுமம் கட்டும் புதிய துறைமுகம்

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாக இந்தியா - அமெரிக்கா கூட்டணியில் அதானி குழுமம் கட்டும் புதிய துறைமுகத்திற்கு அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகம் சுமார் 533 மில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை அளிப்பதாக அமெரிக்க அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.

இந்த செய்தி, அதானி குழும முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய செய்தியாகவும் உள்ளது. ஏனென்றால், இந்த ஆண்டு துவக்கத்திலேயே அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியானதில் இருந்து நஷ்டத்தை அனுபவித்த அதானி குழுமம், அந்த பிரச்சனையை திறமையாக கையாண்டு மீண்டுவிட்டது.

முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கும், அதானி போர்ட்ஸ் & SEZ மற்றும் இலங்கை திட்டத்தைச் செயல்படுத்தும் கிளை நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டதால் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு அதிகரித்து வருகிறது..

மேலும் படிக்க | அதானி குழுமத்திற்கு க்ளீன் சிட்! அமெரிக்கா கொடுத்த விளக்கம் அதானி Port திட்டத்திற்கு தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News