இந்த ரணகளத்திலேயும்... அதானி வாங்கிய மிகப்பெரிய துறைமுகம் - எவ்வளவு தெரியுமா?
Adani Israel Hafia Port: இஸ்ரேலின் இரண்டாவது பெரிய துறைமுகமான ஹைஃபா துறைமுகமும், அதன் கட்டுமான பணி ஒப்பந்தமும் அதானிக்கு வழங்கப்பட்டுள்ளது.
வணிக நிறுவனமான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இஸ்ரேலின் மிகப்பெரிய சர்வதேச துறைமுகங்களில் ஒன்றான ஹைஃபா துறைமுகத்தை கையகப்படுத்தியுள்ளார். அந்த வகையில், இஸ்ரேலில் தொடர்ந்து அவர் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதானி போர்ட்ஸ் (APSE.NS) மற்றும் உள்நாட்டு இரசாயனங்கள் மற்றும் தளவாட நிறுவனமான கடோட் ஆகியவை இணைந்து 4 பில்லியன் ஷெக்கல்கள் (1.15 பில்லியன் அமெரிக்க டாலருக்கு) இந்த துறைமுகத்தை வாங்கியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 9,658 கோடியாகும்.
ஹைஃபா துறைமுகத்தை வாங்கியதை அடுத்த நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், அதானி உரையாற்றினார். அப்போது அவர்,"முழு துறைமுக நிலப்பரப்பையும் மொத்தமாக மாற்றுவோம். அதானி-கடோட் நிறுவன கூட்டணியை மட்டும் பெருமை சேர்க்காமல், ஒட்டுமொத்த இஸ்ரேலையும் பெருமைப்படுத்தும் வகையில் சரியான முதலீடுகளை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும்" என தெரிவித்தார்.
இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும் அதானி சந்தித்துப் பேசினார். ஹைஃபா துறைமுகம் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்ட நாள் 'மிக முக்கியமான நாள்' என்றும் அதானி தெரிவித்தார்.
இதுகுறித்து, அதானி ட்விட்டரில், "ஹைஃபா துறைமுகம் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் இந்த முக்கியமான நாளில் இஸ்ரேலிய பிரதமரை சந்திப்பது மிகப்பெரிய பாக்கியம். ஆபிரகாம் ஒப்பந்தம் மத்தியதரைக் கடல் தளவாடங்களுக்கு ஒரு கேம் சேஞ்சராக இருக்கும். அதானி - கடோட், ஹைஃபா துறைமுகத்தை அனைவரும் போற்றும் வகையில் ஒரு அடையாளமாக மாற்றத் திட்டமிட்டுள்ளது" என்று கெளதம் அதானி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதானி ஒரு முதல் தலைமுறை தொழில்முனைவோர் மற்றும் அதானி குழுமம் எரிசக்தி, துறைமுகங்கள் மற்றும் தளவாடங்கள், சுரங்கம் மற்றும் வளங்கள், எரிவாயு, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் விமான நிலையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 7 பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கொண்டுள்ளது. அதன் ஒவ்வொரு வணிகத்திலும், அந்த குழுமம் இந்தியாவில் ஒரு முதன்மை இடங்களை கைப்பற்றியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் விமான நிலையங்கள், சிமெண்ட், தாமிர சுத்திகரிப்பு, தரவு மையங்கள், பச்சை ஹைட்ரஜன், பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு, சாலைகள் மற்றும் சூரிய மின்கல உற்பத்தி உள்ளிட்ட புதிய வளர்ச்சித் துறைகளில் அதிக முதலீடு செய்துள்ளது. மேலும் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்று, அதனை வாங்கியுள்ள நிலையில், தொலைத்தொடர்பு வெளியிலும் நுழையத் திட்டமிட்டுள்ளது.
தற்போது, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மீது பெருமளவில் குற்றஞ்சாட்டி ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை தாக்கல் செய்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அவரின் வளர்ச்சி குறித்தும், பங்குச்சந்தைகளில் முதலீடுகள் குறித்தும் கேள்வியெழுப்பட்டது. இதற்கு, அதானி தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டாலும், பங்குச்சந்தைகளில் அதானி குழுமத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ