Budget Expectations 2023: பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள், சாமானிய மக்களுக்கு ஜாக்பாட்

Nirmala Sitharaman Budget: தற்போது வெளியாக இருக்கும் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகளை சாமானிய மக்கள் கொண்டுள்ளனர். இது தொடர்பான விரிவாக விவரத்தை இங்கே காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 1, 2023, 08:48 AM IST
  • பட்ஜெட்டில் சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு என்ன.
  • மிடில் கிளாஸ் மக்களின் தேவை, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா?
  • உலக நாடுகள் எதிர்நோக்கும் பட்ஜெட் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் .
Budget Expectations 2023: பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள், சாமானிய மக்களுக்கு ஜாக்பாட் title=

பட்ஜெட் 2023: இன்று (பிப்ரவரி 1ஆம் தேதி) காலை 11 மணிக்கு நாட்டின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில், சாமிய மக்களுக்கு அரசாங்கம் ஒரு பெரிய பரிசை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்திலிருந்து நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் சில வேறுபட்ட வழிமுறைகளை பின்பற்றலாம். அத்துடன் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இருக்கும் என சாமானிய மக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். மேலும் இந்த முறை வருமான வரித்துறையில் பணி விதிப்பு என்ற பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, விவசாயிகள் PM Kisan தொகையை அதிகரிக்கவும், கிரெடிட் கார்டு வரம்பை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த பட்ஜெட்டில் இருந்து சாமானியர்களின் 10 பெரிய எதிர்பார்ப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

வருமான வரியில் கூடுதல் சலுகை கிடைக்கும்?
இந்த பட்ஜெட்டில், வருமான வரி சலுகையில் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு பெரிதாக இருக்கிறது. அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயரும் என நுகர்வோர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த மாற்றத்தால் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பயனடைவார்கள்.

மேலும் படிக்க | பட்ஜெட்டுக்கு முன் ரூ.500 நோட்டு குறித்து ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு..!

80C வரம்பு அதிகரிக்கலாம்
வருமான வரியின் பிரிவு 80C இன் வரம்பில் நீண்ட காலமாக மாற்றமில்லை. இத்தகைய சூழ்நிலையில், இந்த முறை பிரிவு 80C இன் வரம்பை 1.5 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக அதிகரிக்கலாம். தற்போது, ​​1.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டுக்கு, அரசால் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு வரிச்சலுகையா
வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு சிறிய அளவிலான வரிச்சலுகை அறிவிப்பு இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது வங்கிக் கடன் மூலம் வாங்கிய வீட்டிலேயே வசிப்பவர்களுக்கான சலுகை வரம்பு உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், வருமான வரியின் பிரிவு 80EEA இன் கீழ் வட்டியில் ரூ. 1.5 லட்சம் கூடுதல் விலக்கு அளிக்கப்பட்டதை நிதி அமைச்சர் ரத்து செய்தார். இப்போது பிரிவு 24B இன் கீழ் மட்டுமே, வீட்டுக் கடனுக்கான வட்டியில் இரண்டு லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த முறை ரியல் எஸ்டேட் துறைக்கு ஏற்றம் தரும் வகையில் 24பி பிரிவின் கீழ் வரம்பை அரசாங்கம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் தொகையை அதிகரிக்கும்
லோக்சபா தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் மற்றும் பிஎம் கிசான் தொகையை அதிகரிக்கும் நோக்கில், 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக நிதியமைச்சர் உயர்த்தலாம். இந்த கூற்று அனைத்து ஊடக அறிக்கைகளிலும் கூறப்பட்டுள்ளது. இது நடந்தால் விவசாயிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தவணைத் தொகையாக 2000 ரூபாய் கிடைக்கும்.

கிசான் கிரெடிட் கார்டு வரம்பு அதிகரிக்கும்
இந்த பட்ஜெட்டில் கிசான் கிரெடிட் கார்டின் (கேசிசி) வரம்பை அரசாங்கம் அதிகரிக்கலாம். தற்போது விவசாயிகள் 7 சதவீத ஆண்டு வட்டியில் கேசிசி மூலம் ரூ.3 லட்சம் வரை கடன் பெறுகின்றனர். கிசான் கிரெடிட் கார்டு அரசாங்கத்தால் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில் இம்முறை அதன் வரம்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்க் ஃப்ரோம் ஹோம் அலவுன்ஸ்
கடந்த மூன்று ஆண்டுகளாக, அனைத்து நிறுவனங்களிலும் வீட்டில் இருந்து வேலை செய்யும் பாலிசி அமல்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் தொடங்கியுள்ளன. மேலும் வீட்டிலிருந்து வேலை செய்வதால், ஊழியர்களின் மின்சாரம், தளபாடங்கள், பிராட்பேண்ட் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. இதனால் வர்க் ஃப்ரோம் ஹோம் அலவுன்ஸ் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NPS மீது வரி விலக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
NPS ஐ அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது, இதுபோன்ற சூழ்நிலையில், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்யும் 80CCD (1B) இன் கீழ் கிடைக்கும் வரி விலக்கு வரம்பை இந்த முறை நிதியமைச்சர் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PPF வரம்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
பிபிஎப்பில் அதிகபட்ச முதலீட்டு வரம்பை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று நிதி அமைச்சருக்கு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஃபிட்மென்ட் ஃபேக்டர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஃபிட்மென்ட் ஃபேக்டரை அதிகரிக்க வேண்டும் என மத்திய ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதே ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.

மின்சார வாகனத்தில் சலுகை கிடைக்குமா?
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், மக்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்கிறது. இதனால் மின்சார இயக்கம் மீதான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் NRI-களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா நிதியமைச்சர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News