68 ஆண்டுகளுக்குப் பிறகு.. `வெல்கம் பேக், ஏர் இந்தியா` ட்வீட் செய்த ரத்தன் டாடா
ஏர் இந்தியாவை மீண்டும் தனது வீட்டிற்கு வரவேற்று, தனது ட்விட்டர் பக்கத்தில் ரத்தன் டாடா ட்வீட் செய்துள்ளார்.
புதுடெல்லி: ஏர் இந்தியா தொடர்பாக மத்திய அரசு இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. டாடா சன்ஸ் ஏலத்தில் வென்றது. டாடா குழுமத்தால் ஏர் இந்தியா ரூ .18,000 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் ராஜீவ் பன்சால் மற்றும் அரசாங்கத்தின் முதலீட்டு திட்டத்தை கவனித்து வரும் டிஐபிஏஎம் செயலர் துஹின் குமார் பாண்டே ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை உறுதிப்படுத்தினர்.
டாடா சன்ஸ் தவிர, ஸ்பைஸ்ஜெட்டின் அஜய் சிங் தலைமையிலான கூட்டமைப்பு ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் பங்கேற்றது. அவர்கள் 15,100 கோடிக்கு ஏலம் கேட்டனர். ஆனால் டாடா சன்ஸ் நிறுவனம் ரூ .2,900 கோடி அதிகமாக கொடுத்து ஏலம் கேட்டதால் ஏர் இந்தியா நிறுவனம் ஏலத்தை வென்றது. ஏர் இந்தியா தொடர்பான அனைத்து செயல்முறைகளும் டாடா குழுமத்திடம் ஒப்படைப்பது என்பது டிசம்பர் 10-க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று டிஐபிஎம் செயலாளர் கூறினார்.
சின்னத்தையும் பெயரையும் மாற்றக்கூடாது:
ஏர் இந்தியாவின் புதிய உரிமையாளர் அதன் உரிமையைப் பெற்ற பிறகு, அதனுடன் தொடர்புடைய பெயர் மற்றும் சின்னம் ஐந்து வருடங்களுக்குப் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்குப் பிறகு, டாடா சன்ஸ் விரும்பினால் அதன் பெயரையும் லோகோவையும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அது ஒரு இந்திய நிறுவனம் அல்லது தனிநபருக்கு மட்டுமே கொடுக்க முடியும். எந்த வெளிநாட்டு நபரோ அல்லது நிறுவனமோ அதை அணுக முடியாது.
ALSO READ | Air India Sale: 18000 கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை வாங்கியது டாடா குழுமம்!
எந்த பணிநீக்கம் இருக்கக்கூடாது:
மேலும், ஏலத்தில் வெற்றி டாட குழுமம் ஏர் இந்தியாவின் அனைத்து ஊழியர்களையும் தக்கவைத்துக் கொள்ளும். முதல் ஒரு வருடத்தில் எந்த பணிநீக்கம் இருக்காது. ஒரு வருடம் கழித்து டாடா குழுமம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை வழங்க விருப்பப்பட்டால் வழங்கலாம் என்று சிவில் விமான போக்குவரத்து செயலாளர் ராஜீவ் பன்சால் தெரிவித்துள்ளார்.
68 ஆண்டுகளுக்குப் பிறகு.. மீண்டும் டாடாவிடம்:
ஏர் இந்தியா 1932 இல் டாடா குழுமத்தின் ஜேஆர்டி டாடா-வால் தொடங்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் அதை டாடா ஏர்லைன்ஸாகத் தொடங்கினார். 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அரசாங்கம் அதில் 49 சதவீத பங்குகளை வாங்கியது. பின்னர் 1953 ஆம் ஆண்டில், மத்திய அரசாங்கம் விமானக் கழகச் சட்டத்தை நிறைவேற்றியதை அடுத்து, அதில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது. அதன் பிறகு அது ஒரு அரசு நிறுவனமாக மாறியது. 68 ஆண்டுகளுக்குப் பிறகு, டாடா குழுமம் மீண்டும் ஏர் இந்தியாவுக்கான ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ALSO READ | Watch Video: Air India விமானம் பாலத்திற்கு அடியில் மாட்டிக் கொண்டதா.. உண்மை என்ன..!!
"வெல்கம் பேக், ஏர் இந்தியா" என்று ட்வீட் செய்த ரத்தன் டாடா:
ஏர் இந்தியாவை மீண்டும் தனது வீட்டிற்கு வரவேற்று, தனது ட்விட்டர் பக்கத்தில் ரத்தன் டாடா ட்வீட் செய்துள்ளார். அவர் தனது பதிவில் "ஏர் இந்தியா, மீண்டும் வருக" "டாடா குழுமம் ஏர் இந்தியாவுக்கான ஏலத்தை வென்றது" இது ஒரு நல்ல செய்தி! ஏர் இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்ப கணிசமான முயற்சி எடுக்கும். விமானத் துறையில் டாடா குழுமம் முன்னிலை பெற இது ஒரு வலுவான சந்தை வாய்ப்பை வழங்கும்" என்று டாடா குழுமம் தலைவர் கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR