Airtel Recharge Plans: குறைந்த விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இது உங்களுக்கான செய்தி. மேலும் இந்த திட்டம் மூலம் உங்களுக்கு OTT பயன்பாடும் இலவச கிடைக்கும். இந்த சலுகைகளை கொண்ட திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது. இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் (Airtel Prepaid Plan) திட்டத்தின் விலை 350 ரூபாய்க்கும் குறைவானது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். ஆனால் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்தின் மூலம் தரவு, அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் தவிர மேலும் 6 நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர்டெல் 349 திட்டம்:
ரூ .349 என்ற இந்த ஏர்டெல் திட்டத்தில் தினசரி 2 ஜிபி அதிவேக தரவு மட்டுமல்லாமல், எந்தவொரு நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு (Unlimited Calling) மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன.


இலவச அழைப்பு, தரவு மற்றும் எஸ்எம்எஸ் தவிர, இந்த திட்டத்துடன் பிற சலுகைகளும் அளிக்கப்படுகிறது. ரூ. 350 க்கும் குறைவான விலையில் கிடைக்கும் இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் ஒன்று அல்லது இரண்டு அல்ல 6 சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.


ALSO READ |  PUBG Mobile கேம் மீண்டும் இந்தியாவுக்குள்? Airtel நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை: அறிக்கை


இந்த ஏர்டெல் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். ஒரு நாளிக்கு 2GB என்றால், 28 நாட்களுக்கு மொத்தம் 56GB அதிவேக தரவு வழங்கப்படுகிறது.


பிற நன்மைகள்:
இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் (Amazon Prime Video) OTT தளம் 28 நாட்களுக்கு இலவசமாக கிடைக்கும். இசை மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையில் விங்க் மியூசிக் (Wink Music) மூலம் இலவசமாக பாடல்களை கேட்கலாம். மேலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்திற்கான (Airtel Xstream Premium) அணுகல் எந்த கட்டணமும் இன்றி வழங்கப்படும்.


வரம்பற்ற முறையில் இலவச ஹாலோடூனை (HelloTune)உங்கள் போனில் அமைக்க முடியும். ஃபாஸ்டேக் (FASTag) வாங்கும்போது ரூ .150 கேஷ்பேக் கிடைக்கும். ஒரு வருடம் Shaw Academy-யில் ஆன்லைன் கோர்ஸ் இலவசமாக படிக்கலாம். இந்த சலுகைகள் எல்லாம், ரூ .349 என்ற ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும். உடனடியாக இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுங்கள்.


ALSO READ |  இனி ஷாப்பிங் செய்ய பணம் கொண்டு போகவேண்டாம்... இந்த ஒரு App போது..!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!