ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்கள்? இனி இந்த ஓடிடி தளங்களை இலவசமாக பார்க்கலாம்!
ஏர்டெல்லில் ரூ.3359 திட்டமானது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ப்ரைம் வீடியோ மொபைல் எடிஷன் ஆகிய இரண்டிற்குமான அணுகலை வழங்குகிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது, அதிலும் குறிப்பாக கிரிக்கெட் பிரியர்களுக்காக ஒரு தனி திட்டத்தை ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனம் வழங்குகிறது. தற்போது இந்நிறுவனம் கிரிக்கெட் திட்டங்களை மாற்றியுள்ளது, இதில் வாடிக்கையாளர்கள் பலவிதமான சேவைகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஏர்டெல் நிறுவனம் வழங்கும் நான்கு கிரிக்கெட் வகையான திட்டங்களில், இரண்டு திட்டங்களில் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் கிடைக்கிறது. முன்னர் இந்த திட்டங்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு அணுகலை வழங்கப்பட்டது, ஆனால் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்குப் பதிலாக அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை நிறுவனம் வழங்குகிறது. ரூ. 2999 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித ஓடிடி நன்மைகளும் கிடைக்காது மற்றும் ரூ.3359 திட்டமானது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ப்ரைம் வீடியோ மொபைல் எடிஷன் ஆகிய இரண்டிற்குமான அணுகலை வழங்குகிறது.
மேலும் படிக்க | Old Income Tax Regime Vs New: இரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன?
ரூ.699 திட்டம்:
ஏர்டெல்லின் இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, இதில் தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் இதில் 56 நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை பயன்படுத்தலாம்.
ரூ.999 ரீசார்ஜ் திட்டம்:
ஏர்டெல்லின் இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பையும் பெறுவார்கள் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக் கிடைக்கும்.
ரூ.2999 ரீசார்ஜ் திட்டம்:
ஏர்டெல்லின் இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, இதில் எந்த ஓடிடி சந்தாவும் கிடைக்காது. இதில் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. இது தவிர இலவச ஹலோ ட்யூன், அப்பல்லோ 24|7 சர்க்கிள், ஃபாஸ்டாக் கேஷ்பேக் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவை கிடைக்கும்.
ரூ.3359 ரீசார்ஜ் திட்டம்:
ஏர்டெல்லின் இந்த திட்டம் ஒரு வருட வேலிடிட்டியுடன் வருகிறது, இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இது தவிர ஒரு வருட அமேசான் பிரைம் வீடியோ சந்தாவுடன், ஒரு வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கிறது.
மேலும் படிக்க: Aadhaar Mobile Link: ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை எப்படி இணைப்பது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ