ஆதார் அட்டையை PAN உடன் இணைப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2021 ஆகும். மார்ச் 31 க்குள் ஆதார் பான் உடன் இணைக்கப்படாவிட்டால், நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். உங்கள் PAN செயலிழக்கச் செய்யப்படலாம். இதற்குப் பிறகு, இதை உபயோகித்தால், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது மட்டுமல்ல, மார்ச் 31 க்கு முன், பல பணிகளை நிண்கள் செய்து முடிப்பது அவசியமாகும். இந்த பணிகளை நீங்கள் சரியான நேரத்தில் முடிக்கவில்லை என்றால், அவை உங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.


மதிப்பீட்டு ஆண்டு 2020-21-க்கு (வணிக ஆண்டு 2019-20) தாமதமாக வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2021 ஆகும். விதிகளின்படி, எந்தவொரு வணிக ஆண்டிற்கும் ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்த பிறகும் வருமானத்தை தாக்கல் செய்யலாம். இருப்பினும், தாமதமாக ரிட்டர்ன் தாக்கல் செய்வதால், நீங்கள் அபராதமும் செலுத்த வேண்டி இருக்கும்.


ஜீ நியூஸ் செய்தியின் படி, வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் போது சில நேரங்களில் தவறு ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், திருத்தப்பட்ட ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதற்கான வசதியும் வரி செலுத்துவோருக்கு கிடைக்கிறது.


ALSO READ: UIDAI: Aadhaar எங்கே, எவ்வளவு பயன்படுத்தப்பட்டது? உடனடியாக சரிபார்க்கவும்!


2021-22 மதிப்பீட்டு ஆண்டிற்கான அட்வான்ஸ் வரியின் நான்காவது தவணையை மார்ச் 15 க்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். வருமான வரிச் சட்டத்தின் கீழ், ஒருவரது வரி (Tax) ஒரு வருடத்தில் ரூ .10,000 க்கும் அதிகமாக இருந்தால், அவர் 4 தவணைகளில் முன்கூட்டியே வரி செலுத்த வேண்டும். அட்வான்ஸ் வரியை ஜூலை 5, செப்டம்பர் 15, டிசம்பர் 15 மற்றும் மார்ச் 15 க்கு முன் செலுத்த வேண்டும். இருப்பினும், தொழில்முறை வருமானம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


நேரடி வரி தகராறு தீர்க்கும் திட்டமான ‘பேச்சுவார்த்தை மூலம் நம்பிக்கை’-யின் கீழ், விவரங்களை வழங்குவதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை மார்ச் 31 வரையும் கட்டணம் செலுத்துவதை ஏப்ரல் 30 வரையும் நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வரி சிக்கல்களை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


2019-20 வணிக ஆண்டிற்கான வருடாந்திர ஜிஎஸ்டி (GST) வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2021 பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டது.


ALSO READ: உங்கள் Aadhaar ஐ விரைவாக PAN உடன் இணைகக்கவும்..இல்லையெனில்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR