ITR Update: வருமான வரி Refund விரைவில் திரும்பப்பெறலாம், எப்படி? இப்படித்தான்..

வருமான வரி செலுத்தியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டிய Refund பெறுவதில் இனி தாமதம் ஏற்படாது, குறிப்பிட்ட காலத்திற்குள் வரி செலுத்தியவர்களின் பணத்தைத் திரும்பப் கொடுக்க வேண்டும் என்று நடைமுறை மாறுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 4, 2021, 04:37 PM IST
  • 90 நாட்களில் பணத்தைத் திரும்பப் பெறலாம்
  • ஐ.டி.ஆரை நிரப்புவதற்கான சரியான விதிகளை அறிந்து கொள்ளுங்கள்
  • வங்கிக் கணக்கை சரியாக பூர்த்தி செய்யவும்
ITR Update: வருமான வரி Refund விரைவில் திரும்பப்பெறலாம், எப்படி? இப்படித்தான்.. title=

புதுடெல்லி: வருமான வரி செலுத்தியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டிய Refund பெறுவதில் இனி தாமதம் ஏற்படாது, குறிப்பிட்ட காலத்திற்குள் வரி செலுத்தியவர்களின் பணத்தைத் திரும்பப் கொடுக்க வேண்டும் என்று நடைமுறை மாறுகிறது.

பொதுவாக, வருமான வரி தாக்கல் செய்த நீண்ட நாட்களுக்குப் பிறகே, நமக்கு திரும்பச் செலுத்த வேண்டிய தொகையை வருமான வரித் துறை கொடுக்கிறது. அது வரும் என்று தெரியும், ஆனால் எப்போது வரும் என்று தெரியாது என்று பலரும் புலம்புவதை கேட்டிருக்கலாம்.

இனி அந்த வருத்தம் அகன்றுவிடும். பொதுவாக சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமானத்திற்கான வரியை பிடித்தம் செய்துவிட்டே மீதமுள்ள தொகை ஊதியமாக கொடுக்கப்படுகிறது. எனவே, வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே நாம் வருமான வரியை கட்டுகிறோம். நாம் கணக்கு தாக்கல் செய்த பிறகு, நமக்கு அரசிடம் இருந்து வர வேண்டிய வரி நிலுவையை திரும்பப் பெறுவதற்கு ஆகும் காலதாமதம் அனைவருக்கும் மிகப் பெரிய குறையாகவே இருந்துவந்தது.

Also Read | LTC, DA, சம்பள உயர்வு குறித்த 7th Pay Commission அண்மைத் தகவல்கள் என்ன?

ஆனால், ஐ.டி.ஆரை தாக்கல் செய்யும் போது, நீங்கள் சில விஷயங்களை கவனத்தில் கொண்டால் 90 நாட்களில் உங்கள் பணம் திரும்ப வந்துவிடும். தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்கு தெளிவானதாக, எந்த இடையூறும் இல்லாததாக இருந்தால்,   

நீங்கள் கட்டிய உபரி வரி உடனடியாக திரும்பக் கிடைத்துவிடும். உரிய முறையில் சரியாக வரி தாக்கல் செய்திருந்தால், உங்கள் வருமானம் தொடர்பான அனைத்து புள்ளிவிவரங்களும் சரியாக இருந்தால், வருமானத்தைத் தாக்கல் செய்த 90 நாட்களுக்குள் உங்கள் நிலுவைத் தொகை உங்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 

அதோடு, நீங்கள் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களும் சரியானதாக இருந்தால், 90 நாட்களுக்குள் உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம். இதுதொடர்பாக, வருமான வரித்துறை இந்த ஆண்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது. எனவே இனிமேல் 90 நாட்களில் பணத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியம் தான் என வருமான வரித் துறை உறுதி கூறுகிறது.

Also Read | சிம்லாவின் பனிப்பொழிவை அனுபவிக்கும் சுற்றுலாப் பயணிகள்

விதிகளில் மாற்றம்  

இந்த ஆண்டு மத்திய அமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), தாக்கல் செய்த பட்ஜெட்டில் இது பற்றி தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் பணத்தைத் திரும்பப் பெறாததால், முழு ஆண்டு வரி முறையும் குழப்பமடைகிறது, எனவே இப்போது முழு செயல்முறையும் 9 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இது வரி தொடர்பான விஷயங்களை விரைவாக தீர்க்க உதவியாக இருக்கும் மற்றும் வரி வசூலை (Tax Collection) அதிகரிக்கும் என்று அரசாங்கம் நம்புவதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.  

பணத்தைத் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏன்?
வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் போது நீங்கள் முழுமையான தகவல்களை வழங்கவில்லை என்றால், பணத்தைத் திரும்பப் பெற தாமதமாகலாம். நீங்கள் வங்கியின் ஐ.எஃப்.எஸ்.சி (IFSC) குறியீட்டை சரியாக வழங்கவில்லை என்றால், பணத்தைத் திரும்பப் பெறுவது தாமதமாகும். வங்கி கணக்கு எண் தவறாக உள்ளிடப்பட்டிருந்தாலும் பணத்தைத் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். பல முறை, தேவையான ஆவணங்களை வழங்காததால் வரி திருப்பிச் செலுத்துவதற்கு வருமான வரித்துறைக்கு அதிக காலம் பிடிக்கிறது. 

ALSO READ |  விவசாயிகள் போராட்டம் குறித்த ட்வீட் ... கங்கனாவிற்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News