இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) '100 Days 100 Pays' என்கிற திட்டத்தின் மூலம் உரிமை கோரப்படாத டெபாசிட்களை உரிமையாளருக்கோ அல்லது உரிமைகோருபவர்களுக்கோ திருப்பிச் செலுத்த உதவும் வகையில் தொடங்கியுள்ளது.  இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு வங்கியிலும் க்ளைம் செய்யப்படாத முதல் 100 டெபாசிட்டுகளை 100 நாட்களுக்குள் கண்டறிந்து உரிய நபர்களுக்கு வழங்கும் வகையில் வங்கிகளுக்கு '100 Days 100 Pays' பிரச்சாரத்தை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  சுமார் 10 வருடங்களாக செயல்படாமல் இருக்கும் சேமிப்பு/நடப்புக் கணக்குகளில் உள்ள இருப்புக்கள் அல்லது முதிர்வு தேதியிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் கோரப்படாத டெர்ம் டெபாசிட்டுகள் அனைத்தும் "கிளைம் செய்யப்படாத டெபாசிட்டுகள்" என்கிற பிரிவில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.  இந்த கணக்குகளிலுள்ள தொகை ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் "டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு" (டிஇஏ) நிதிக்கு மாற்றப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | LIC: எல்ஐசியின் மகத்தான பாலிசி... முதிர்வடையும் போது ரூ. 91 லட்சம் கிடைக்கும்!


க்ளைம் செய்யப்படாத டெபாசிட் தொகையை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வங்கியைக் கண்டறிந்து தொடர்பு கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.  ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையானது, வங்கி அமைப்பில் க்ளைம் செய்யப்படாத டெபாசிட்டுகளின் அளவைக் குறைப்பதற்கும், அத்தகைய தொகையை அதன் உண்மையான உரிமையாளர்களுக்குத் திருப்பித் தருவதற்கும் உதவும்.  ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதியானது ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.  சமீபத்தில், ரிசர்வ் வங்கி பல வங்கிகளில் க்ளைம் செய்யப்படாத டெபாசிட்களைத் தேடுவதற்கு, பொது மக்களுக்காக ஒரு இணைய போர்ட்டலை அமைப்பதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது க்ளைம் செய்யப்படாத டெபாசிட்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு, டெபாசிட்களை தேடுவதற்கு ஒரு இணைய போர்ட்டலை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இது வைப்பாளர்கள்/பயனாளிகள் பெறுவதற்கு உதவும். கோரப்படாத டெபாசிட்களை திரும்பப் பெறுங்கள்" என்று ரிசர்வ் வங்கி கூறியது.  மத்திய அரசு வெளியிட்ட அறிக்கைகளின்படி, பிப்ரவரி 2023 நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளால் ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்பட்ட க்ளைம் செய்யப்படாத டெபாசிட்களின் மொத்த மதிப்பு ரூ.35,012 கோடி ஆகும்.  10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் க்ளைம் செய்யப்படாத டெபாசிட்தாரர்கள் அதனை வங்கிகளின் இணையதளம் மூலம் சரிபார்த்து கொள்ளலாம்.


க்ளைம் செய்யப்படாத டெபாசிட் தொகையை க்ளைம் செய்ய சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:


1) சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
2) அடையாளச் சான்று
3) முகவரி சான்று 
4) பாஸ்புக்
5) டெர்ம் டெபாசிட்/ ஸ்பெஷல் டெர்ம் டெபாசிட் ரசீதுகள்


க்ளைம் செய்யப்படாத டெபாசிட்களைப் பெறுவதற்கு மக்கள் சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று மேற்கண்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.  நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் உங்களுக்கு சேர வேண்டிய தொகை வழங்கப்படும்.


மேலும் படிக்க | Gold rules: இனி தங்க நகைகளை விற்க முடியாது! அமலுக்கு வந்தது புதிய விதிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ