மே 31 வரை வங்கி கணக்கில் ரூ. 20 வைத்திருங்கள்... இல்லையெனில் ரூ. 2 லட்சத்தை இழக்க நேரிடும்!
வரும் மே 31ஆம் தேதி வரை உங்கள் வங்கி கணக்கில் ரூ. 20 வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ரூ. 2 லட்சம் வரையிலான காப்பீட்டை நீங்கள் இழக்க நேரிடும்.
Pradhan Mantri Suraksha Bima Yojana: நவீன யுகத்தில் ஒவ்வொருவரும் வங்கி கணக்கு வைத்து, அதனை முறையாக பராமரிக்கிறீர்கள். தொலைவில் இருப்பவர்களுக்கு பணத்தை அனுப்பவும், அவர்களிடம் இருந்து பணத்தை பெறவும் வங்கி கணக்குகள் சாமனிய மக்களுக்கும் மிக அத்தியாவிசயாகிவிட்டது.
குறிப்பாக, தற்போதெல்லாம் சாலையோர கடைகளில் கூட UPI பரிவர்த்தனை தேவை இருப்பதால், அந்த கடைக்காரர்களும் வங்கி கணக்கை வைத்து, அதில் பண பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். பாமரர்களை பொறுத்தவரை, வங்கி என்பது இன்னும் முழுமையாக புரியாத புதிராக இருந்தாலும், ஏடிஎம் மிஷின்கள், மொபைல் எஸ்எம்எஸ்கள் போன்ற சில சேவைகள் அவர்களின் சிரமத்தை குறைக்கின்றன.
மேலும், பொதுத்துறை வங்கிகளில் மட்டுமின்றி தனியார் வங்கிகளிலும் தற்போது பலரும் கணக்கு வைத்திருக்கிறார்கள். சேமிப்புகான வட்டி, மாதாந்திர/வருடாந்திர டெபாசிட்டுக்கான வட்டி, முதலீடுக்கான வட்டி என பல்வேறு சேவைகளை வங்கிகளும், தபால் அலுவலகங்களும் வழங்கிகின்றன. இவை மட்டுமின்றி, சமையல் கேஸ் சிலிண்டர் மானியம் முதல் பல சேவைகளுக்கு, அரசு அமைப்பிலும் தற்போது வங்கி கணக்கின் தேவை உள்ளது. இந்த திட்டங்களையும், சேவைகளையும் பெற ஒருவர் வங்கி கணக்கை வைத்திருப்பது அவசியமாகிறது.
மேலும் | போஸ்ட் ஆப்ஸில் எவ்வளவு ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் எவ்வளவு கிடைக்கும்?
அந்த வகையில், பல்வேறு பிரிவினருக்கு பயனளிக்கும் வகையில் மத்திய அரசு பல திட்டங்கள் வகுத்துள்ளது. அத்தகைய திட்டங்களில் ஒன்று, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ், உங்களிடம் ரூ. 20 மட்டுமே இருந்தால், ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ், விபத்தினால் ஏற்படும் மரணம் மற்றும் நிரந்தர முழு இயலாமை கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், நிரந்தர பாதி இயலாமை கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த திட்டம் குறித்து முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
என்ன திட்டம்?
இது ஒரு வருட விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத்தக்கது. இந்த திட்டம் விபத்து காரணமாக ஏற்படும் இறப்பு அல்லது ஊனத்தை (மாற்றுத்திறனை) உள்ளடக்கியது. சேமிப்பு வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருக்கும் 18-70 வயதுக்குட்பட்ட நபர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள்.
மே 31 ஒரு முக்கியமான நாள்
இந்த திட்டத்தின் கீழ், கவரேஜ் காலம் ஜூன் 1 முதல் மே 31 வரை ஆகும். புதுப்பித்தல்கள் ஆண்டுதோறும் மே 31 அல்லது அதற்கு முன் செய்யப்படுகின்றன. இதன் கீழ், உங்கள் கணக்கில் இருந்து ரூ.20 தானாகவே கழிக்கப்படும்.
பதிவு செய்வது எப்படி
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்வது கணக்கு வைத்திருப்பவரின் வங்கியின் கிளை அல்லது இணையதளம் மூலம் செய்யலாம். தபால் அலுவலக சேமிப்பு கணக்கைப் பொறுத்தமட்டில் தபால் அலுவலகத்திற்கு செல்வதன் மூலம் பதிவு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ், சந்தாதாரர் ஒரு முறை மட்டுமே ஆர்டர் செய்த ஆர்டரின் அடிப்படையில் வங்கிக் கணக்கில் இருந்து தானாக டெபிட் செய்து பிரீமியத்தைச் செலுத்த முடியும்.
மேலும் படிக்க | அதிகளவில் ஓய்வூதியம் பெற நினைக்கும் ஊழியர்கள் செய்ய வேண்டியவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ