எதிர்காலத்தைப் பற்றி இளம் வயதில் இருந்தே திட்டமிட்டால், ஓய்வு காலத்தில் எவரையும் சாராமல் நிம்மதியாக கழிக்கலாம். பணத்தை பெருக்கும் சிறந்த முதலீட்டுத் திட்டம் SIP. அந்த வகையில் பரஸ்பர நிதியத்தில் ஆயிரத்தை கோடிகளாக்கலாம்.
வருங்காலத்தை பற்றி அச்சமில்லாமல் இருக்கவும், நிதி நெருக்கடி ஏற்படாமல் இருக்கவும், பணத்தை திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். அதற்கு பரஸ்பர நிதியம் மிகவும் சிறந்தது. அதில் நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், ஆயிரத்தை கோடிகளாக்கலாம்.
உங்கள் வயது 25 முதல் 30 வயது என இருக்கும் போதே முதலீடு செய்ய தொடங்குவது சிறப்பு. உங்களால் முடிந்த அளவு சிறிய முதலீட்டில் நிதியை பெருக்குலாம். அதற்கு மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்வது சிறப்பு.
உங்கள் சம்பளம் ரூ.50,000 என்றால், 70:30 என்ற ஃபார்முலாவின்படி, ஒவ்வொரு மாதமும் 15 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். சிறிய முதலீடுகளைச் செய்வதன் மூலம், பெரிய அளவில் நிதியை பெருக்க முடியும்.
மியூச்சுவல் ஃபண்டுகள் என்னும் பரஸ்பர நிதியங்கள் மீதான் முதலீடு 15 முதல் 20 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளன. மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்தால், 30 ஆண்டுகளில் 54 லட்சம் ரூபாய் முதலீடு செய்வீர்கள். இதில் 15% வருமானம் கிடைத்தால், 30 ஆண்டுகளில் இந்த தொகை ரூ.10.51 கோடியாக அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வது சந்தை ஆபத்துக்கு உட்பட்டது. எந்த வகையான முதலீட்டையும் செய்வதற்கு முன், தயவுசெய்து ஒரு நிதி முதலீடு தொடர்பான நிபுணரை அணுகி ஆலோசிக்கவும்.