ஏப்ரல் 1, 2023 முதல் ரூ.2000-க்கு மேல் டிரான்ஸாக்ஷன் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என இந்திய தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியில், புதிய பணம் செலுத்தும் வகையில் ப்ரீபெய்டு இன்ஸ்ட்ரூமென்ட்களும் (பிபிஐ) யூபிஐ-ஐ பயன்படுத்தக்கூடிய வகையில், வாடிக்கையாளர்கள் செய்யும் ரூ.2000-க்கு மேலான பரிவர்த்தனைக்கு 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என்று செய்திகள் வெளியானது. ஆனால் உண்மையில் இந்த கட்டணத்தை வணிகர்களே செலுத்துவார்கள், வாடிக்கையாளர்கள் செலுத்தமாட்டார்கள், இருப்பினும் வணிகர்கள் இந்தக் கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். யூபிஐ மூலம் பொதுவான பரிவர்த்தனைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
ப்ரீபெய்டு இன்ஸ்ட்ரூமென்ட்களுக்குப் பொருந்தக்கூடிய பரிமாற்றக் கட்டணத்தின் மீதான என்பிசிஐ முன்மொழிவுக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் யூபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா என்று மக்களிடையே யோசனை எழுந்தது. இந்நிலையில் இப்போது என்பிசிஐ எந்தவொரு வாடிக்கையாளரும் யூபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த முன்மொழிவு பிபிஐ-க்கு மட்டுமே பொருந்தும், அதாவது வங்கி கணக்குகளை இணைப்பது ஆகும்.
வங்கி கணக்குகளை இணைப்பது என்பது யூபிஐ பரிவர்த்தனைகளில் நடக்கும் பொதுவான ஒன்று தான். கிட்டத்தட்ட 99.9% வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட பரிவர்த்தனை தான் நடக்கிறது, இருப்பினும் இந்த முன்மொழிவின் முக்கிய நோக்கம் மீதமுள்ள 0.1% பரிவர்த்தனைகளை வங்கியுடன் இணைப்பதேயாகும். சுருக்கமாக சொன்னால், வணிகர்கள் வாலட் நிறுவனத்திற்கு 1.1% கட்டணத்தைச் செலுத்த வேண்டும், ஏனெனில் இது ப்ரீபெய்டு கருவியாகும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஏப்ரல் முதல் நாளே சூப்பர் செய்தி: அதிரடியாக குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ