நவம்பர் 1 முதல் வங்கியில் பணம் டெபாசிட் செய்யவும், எடுக்கவும் கட்டணம் வசூலிக்கப்படும்
வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யவும், பணத்தை திரும்பப் பெறுவதற்கு அளிக்கப்பட்டு வந்த இலவச சேவை இப்போது முடிவடைய உள்ளது. நவம்பர் 1 முதல், வங்கியில் இந்த இரண்டு சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.
Bank of Baroda Change Rules: வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யவும், பணத்தை திரும்பப் பெறுவதற்கு அளிக்கப்பட்டு வந்த இலவச சேவை இப்போது முடிவடைய உள்ளது. நவம்பர் 1 முதல், வங்கியில் இந்த இரண்டு சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். வங்கி விதிகளில் மாற்றங்கள் செய்த பிறகு, வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கும் திரும்பப் பெறுவதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த வீதி "பாங்க் ஆப் பரோடா" (Bank of Baroda) வில் தொடங்கியுள்ளது. பாங்க் ஆப் இந்தியா (Bank of India), பி.என்.பி (PNB), ஆக்சிஸ் வங்கி (Axis Bank) மற்றும் சென்ட்ரல் வங்கி (Central Bank) ஆகியவையும் இந்த விஷயத்தில் விரைவில் ஒரு முடிவை எடுக்கவுள்ளது. இருப்பினும், இந்த கட்டணத்தை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி பரிவர்த்தனை செய்யும் போது செலுத்த வேண்டும்.
எந்த கணக்குகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் (Which accounts will be charged)
நடப்புக் கணக்கு (Current account), பணக்கடன் வரம்பு (Cash Credit Limit ) மற்றும் ஓவர் டிராஃப்ட் கணக்கில் (Overdraft Account) பணத்தை டெபாசிட் செய்வதற்கும் திரும்பப் பெறுவதற்கும் பாங்க் ஆப் பரோடா நிலையான கட்டணங்கள் பட்டியலை தயாரித்துள்ளது. சேமிப்பு வங்கி கணக்கில் (Savings Bank account) உள்ள பணத்தை திரும்பப் பெறுவதற்கான தனி கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்திலிருந்து, ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் மூன்று முறைக்கு மேல் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும்போது, அவர்கள் ரூ .150 கட்டணம் செலுத்த வேண்டும்.
ALSO READ | RBI அதிரடி!! வங்கிகள் உங்களுக்கு தினம் ரூ.100 அபராதம் செலுத்தும்? காரணம் என்ன!
மூன்று முறை மட்டுமே பணத்தை டெபாசிட் செய்வது இலவசம் (It will be free to deposit money only for three times)
சேமிப்பு கணக்கு (Savings Account) வாடிக்கையாளர்கள் மூன்று முறை வரை பணத்தை டெபாசிட் செய்ய இலவசமாக இருக்கும். பணத்தை நான்காவது முறையாக கணக்கில் டெபாசிட் செய்தால், நீங்கள் 40 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் மூத்த குடிமக்களுக்கு கூட வங்கிகள் எந்த நிவாரணமும் வழங்கவில்லை. இருப்பினும், ஜன் தன் கணக்கு (Jan Dhan Account) வைத்திருப்பவர்கள் பணத்தை டெபாசிட் செய்வதற்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் திரும்பப் பெறுவதற்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
எந்த கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படும்?
ரொக்க கடன் வரம்பு, நடப்பு கணக்கு மற்றும் ஓவர் டிராஃப்ட் கணக்கு வைத்திருப்பவர் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்வதற்கான வசதியைப் பெறுவார்கள். ஆனால் இதை விட அதிக பணம் டெபாசிட் செய்ய வங்கிகள் கட்டணம் வசூலிக்கும். கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்ய, ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும். இதற்கான குறைந்தபட்ச வரம்பு 50 மற்றும் அதிகபட்ச வரம்பு 20 ஆயிரம் ரூபாய். கடன் வரம்பு, நடப்புக் கணக்கு மற்றும் ஓவர் டிராஃப்ட் கணக்குகளில் இருந்து ஒரு மாதத்திற்கு மூன்று முறை பணம் திரும்பப் பெறப்பட்டால், கட்டணம் வசூலிக்கப்படாது. நான்காவது முறையாக திரும்பப் பெறும்போது, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் வசூலிக்கப்படும்.
ALSO READ | எந்த வங்கி குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும்.. Top 10 வங்கிகளின் பட்டியல்!
சேமிப்பு வங்கி கணக்கில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது? (How much charge on savings bank account?)
சேமிப்பு வங்கி கணக்கு 3 முறை வரை டெபாசிட் செய்வது கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக இருக்கும். நான்காவது முறையாக, ஒவ்வொரு முறையும் நீங்கள் 40 ரூபாய் வைப்புத்தொகையை செலுத்த வேண்டும். திரும்பப் பெறுவதற்கு, ஒவ்வொரு கணக்கிலும் மாதத்திற்கு 3 பரிவர்த்தனைகள் இலவசமாக இருக்கும். நான்காவது பரிவர்த்தனையில், வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.