பழைய ஓய்வூதியம் தொடர்பான முக்கிய செய்தி! லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி!
Old Pension Scheme Update: நாட்டின் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், இமாச்சல பிரதேச மாநில மின்சார வாரியத்தின் (HPSEB) பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களின் கூட்டு மன்றம், பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரியுள்ளது.
Old Pension Scheme Update: பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் இன்னும் விவாதம் நடந்து வருகிறது. இப்போது பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) தொடர்பான ஒரு பெரிய அப்டேட் முன்னுக்கு வந்துள்ளது. இந்த நேரத்தில் நாட்டின் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், இமாச்சல பிரதேச மாநில மின்சார வாரியத்தின் (HPSEB) பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களின் கூட்டு மன்றம், பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரியுள்ளது. இதனுடன், HPSEB இன் உற்பத்தி மற்றும் பரிமாற்ற சொத்துக்களை முறையே HPPCL (ஹிமாச்சல பிரதேச பவர் கார்ப்பரேஷன்) மற்றும் HPPTCL (ஹிமாச்சல பிரதேச பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன்) ஆகியவற்றிற்கு மாற்றும் திட்டத்தையும் மன்றம் எதிர்த்துள்ளது.
மேலும் படிக்க | Money Tips: ₹15,000 முதலீட்டில் நேந்திரம் பழ தூள் தயாரித்து ஆயிரங்களை அள்ளலாம்!
1.18 லட்சம் பேர் பழைய ஓய்வூதியத்தை தேர்வு செய்துள்ளனர்
இமாச்சலப் பிரதேசத்தில் 346 பணியாளர்கள் மட்டுமே தேசிய ஓய்வூதிய அமைப்பில் அதாவது NPS இல் இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். சுமார் 1.18 லட்சம் ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அதாவது ஓபிஎஸ்-ஐ தேர்வு செய்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்ய திங்கள்கிழமை கடைசி வாய்ப்பு. மே 4 அன்று, இமாச்சல பிரதேச ஊழியர்களுக்கு அரசாங்கம் இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கியது. திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய முன்னணியின் கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக இங்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஹெச்பிஎஸ்இபியின் சொத்துகளைப் பிரிப்பது ஊழியர்களின் நலனோ அல்லது மின் நுகர்வோர் நலனோ அல்ல என்று வலியுறுத்தப்பட்டது.
HPSEB இலிருந்து HPPCL க்கு நான்கு சிறிய நீர்மின் திட்டங்களை மாற்றுவது குறித்து தீவிர கவலையை வெளிப்படுத்திய ஐக்கிய முன்னணி, இந்தத் திட்டங்கள் மேம்பட்ட நிலையில் இருப்பதாகவும், இந்த நிலையில் திட்டங்களை மாற்றினால், செயல்படுத்துவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமாகும் என்றும் கூறியது. மற்றொரு தீர்மானத்தில், RDSS (புனரமைக்கப்பட்ட விநியோகத் துறை திட்டம்) இன் கீழ் HPSEB இல் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட் அளவீடு திட்டத்தை மோர்ச்சா கடுமையாக எதிர்த்தது, மேலும் இது HPSEB இன் நிதி ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கும் என்று கூறியது.
மாநிலங்களை பொறுத்த வரையில் ராஜஸ்தானின் அசோக் கெலாட் அரசுதான் முதன்முதலில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்தியது. சமீபத்தில் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை (ஓபிஎஸ்) அமல்படுத்த ராஜஸ்தான் மாநில சாலை போக்குவரத்து கழகம் (ஆர்எஸ்ஆர்டிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பணியை ராஜினாமா செய்த அல்லது பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவின்படி, பழைய ஓய்வூதிய விருப்பத்தை தேர்வு செய்ய விரும்பும் ஊழியர்கள், ஜூன் 30 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் சிபிஎஃப் திட்டத்தில் உறுப்பினராக கருதப்படுவார்கள் என்று கூறப்பட்டு இருந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ