விஜய் மல்லையாவிடம் நிறுவனத்தை வாங்கி வேற லெவலில் வெற்றி கண்ட அபூர்வ சகோதரர்கள்!!
Inspiring Business Story: தங்கள் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இந்தியாவின் பணக்கார சகோதர ஜோடிகளில் ஒரு ஜோடியாக மாறிய இவர்களது கதை யாரையும் ஆச்சரியப்பட வைக்கும், அனைவரையும் ஊக்குவிக்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய பெயிண்ட் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனம் வணிகப் புத்திசாலித்தனம் மற்றும் விடாமுயற்சியின் ஊக்கமளிக்கும் ஒரு சான்றாக விளங்குகின்றது. சாதாரண கடைக்காரர்களாக இருந்த சகோதரர்கள், தங்கள் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இந்தியாவின் பணக்கார சகோதர ஜோடிகளில் ஒரு ஜோடியாக மாறிய கதை யாரையும் ஆச்சரியப்பட வைக்கும், அனைவரையும் ஊக்குவிக்கும். இவர்களது வெற்றிக்கதை பல இளம் தொழில்முனைவோருக்கு ஒரு பாடமாக அமைகின்றது. 68,000 கோடி ரூபாய்க்கு மேலான சந்தை மூலதனத்துடன் கொடிகட்டிப் பறக்கும் பெர்ஜர் பெயிண்ட்ஸ் குல்தீப் சிங் திங்ரா மற்றும் குர்பச்சன் சிங் திங்ரா ஆகியோரால் நிர்வகிக்கப்படுகின்றது.
குல்தீப் சேர்மனாக நிறுவனத்துக்கு தலைமை வகிக்க, குர்பச்சன் துணைத் தலைவராக உள்ளார். இந்த சகோதரர்கள் பஞ்சாபின் அமிர்தசரஸைச் சேர்ந்த வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திங்க்ரா குடும்பத்தின் வெற்றிக் கதை 125 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. 1898 ஆம் ஆண்டில் அவர்களது தாத்தா ஒரு சிறிய கடையை துவக்கினார். இந்த கடைதான் தற்போது ஒரு பெரிய வணிக சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்துள்ளது.
குல்தீப் மற்றும் குர்பச்சன் ஆகியோர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றனர். தங்கள் அமிர்தசரஸ் கடையில் இருந்து இருவரும் தங்கள் தொழிலை தொடங்கினார்கள். 1970 களில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் விற்றுமுதல் என்ற அளவில் இவர்களது வணிகம் வளரத் தொடங்கியது. 1980 களில், அவர்கள் பழைய சோவியத் யூனியனுக்கு ஏற்றுமதி செய்யும் நாட்டின் மிகப்பெரிய பெயிண்ட் ஏற்றுமதியாளர்களாக உருவெடுத்தார்கள்.
மேலும் படிக்க | இன்கம் டேக்ஸ் ரீப்ஃண்ட் முக்கிய அப்டேட்: இதை செய்யவில்லை என்றால் ரீஃபண்ட் கிடைக்காது
தங்கள் நிறுவனத்தின் அடுத்த பெரிய செயல்முறையாக, ஒரு பன்னாட்டு நிறுவனத்துடன் ஒரு பிராண்டை உருவாக்க வேண்டும் என இருவரும் உணர்ந்தனர். குல்தீப் சிங் திங்ரா, விஜய் மல்லையா தலைமையிலான UB குழுமத்தின் கீழ் இருந்த சிறிய நிறுவனத்தின் மீது தனது பார்வையை செலுத்தினார். ஒரு பொதுவான நண்பர் மூலம் அவருக்கு மிகப்பெரிய பிவரேஜஸ் தொழிலதிபரை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.
இரு சகோதரர்களும் 1990 களில் முன்னாள் தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் UB குழுமத்திடமிருந்து பெயிண்ட் உற்பத்தி பிரிவில் நாட்டின் மிகச்சிறிய நிறுவனங்களில் ஒன்றை வாங்கினார்கள். இந்நிறுவனம் இன்று இந்தியாவின் இரண்டாவது பெரிய பெயிண்ட் தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. இருவருமே நிறுவனத்தில் உள்ள தங்கள் பங்குகளில் இருந்து தலா ரூ.29,700 கோடி ($3.6 பில்லியன்) நிகர மதிப்பை கொண்டுள்ளனர்.
பெர்ஜர் பெயிண்ட்ஸ்: நிறுவனம்
பெர்ஜர் பெயிண்ட்ஸ் லிமிடெட் ஒரு இந்திய பன்னாட்டு பெயிண்ட் நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்தியாவில் 16, நேபாளத்தில் 2, போலந்து மற்றும் ரஷ்யாவில் தலா 1 உற்பத்தி அலகுகளைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் ஹவுரா மற்றும் ரிஷ்ரா, அரின்சோ, தலோஜா, நல்டோலி, கோவா, தேவ்லா, இந்துப்பூர், ஜெஜூரி, ஜம்மு, புதுச்சேரி மற்றும் உத்யோக்நகர் ஆகிய இடங்களில் உற்பத்தி அலகுகளைக் கொண்டுள்ளது. இந்தியா, ரஷ்யா, போலந்து, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய ஐந்து நாடுகளில் இந்நிறுவனம் உள்ளது. இது 3,600-க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ளது மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களைக் கொண்ட நாடு தழுவிய விநியோக வலையமைப்பைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு நிதியமைச்சரின் முக்கிய அறிவிப்பு! மாதம் ரூ.20500 கிடைக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ