7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு டபுள் லாட்டரி! டிஏ ஹைக் குறித்து முக்கிய அப்டேட்

Dearness Allowance Big Update: தொழிலாளர் பணியகத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி தீர்மானிக்கப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 7, 2023, 07:35 AM IST
  • 1 கோடிக்கு மேற்பட்ட ஊழியர்கள், ஓய்வூதியர்கள் ஆகியோர் பயன்பெறுவார்கள்.
  • அகவிலைப்படி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்கிறது.
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு டபுள் லாட்டரி! டிஏ ஹைக் குறித்து முக்கிய அப்டேட் title=

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எவ்வளவு சதவீதம் உயர்கிறது: அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு குறித்து அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். தற்போது அகவிலைப்படி பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது, அதன்படி கூடிய விரைவில் மோடி அரசு அகவிலைப்படி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடலாம். உண்மையில், வரும் நாட்களில் அகவிலைப்படி அதிகரிப்பை அரசு ஊழியர்கள் பெறலாம். மத்திய அரசு ஒப்புக்கொண்ட பார்முலாவின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (Dearness Allowance Hike) மூன்று சதவீதம் அதிகரிக்கலாம். தற்போது டிஏ 42 சதவீதமாக உள்ளது. மூன்று சதவீதம் அதிகரிப்புக்கு பிறகு அகவிலைப்படி 45 சதவீதமாக மாறும்.

அகவிலைப்படி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
இந்நிலையில் தற்போது அகவிலைப்படியை உயர்த்த மோடி அரசு (Modi Government) முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், தொழிலாளர் பணியகத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்கள் (Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான (Pensioners) அகவிலைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. தொழிலாளர் பணியகம் என்பது தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு கிளை ஆகும். இதன் மூலம், அரசு ஊழியர்களுக்கு ஏராளமான அகவிலைப்படி சலுகைகள் கிடைக்கும்.

மேலும் படிக்க  |  எல்ஐசியின் பக்கா பாலிசி... ரூ. 1.5 லட்சம் வரை வரி சலுகை - செப். 30 வரை வாய்ப்பு!

இந்த கோரிக்கைகள் வைக்கப்படுகின்றது
இதனிடையே இது குறித்து அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறியதாவது., ''ஜூன் 2023க்கான CPI-IW ஜூலை 31, 2023 அன்று வெளியிடப்பட்டது. ஆனால் அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்த வேண்டும் என்று எங்களின் நாங்கள் கோரிக்கையாகும். ஆனால் அரசாங்கம் அகவிலைப்படியை (DA Hike) மூன்று சதவீதம் தான் அதிகரிக்க இருக்கிறது. இதன் மூலம் அகவிலைப்படி 45 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளது என்றார்.

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees), அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த அகவிலைப்படி உயர்வால் (டிஏ ஹைக் நியூஸ்) மத்திய அரசின் 1 கோடிக்கு மேற்பட்ட ஊழியர்கள், ஓய்வூதியர்கள் ஆகியோர் பயன்பெறுவார்கள்.

இரண்டாவது முறை அகவிலைப்படி உயர்வு
இந்நிலையில், மத்திய அரசு ஆண்டுக்கு 2 முறை அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தும். அதன்படி ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும். கடைசியாக மார்ச் 2023 ஆம் ஆண்டில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்து 42 சதவீதமாக இருந்தது. இனி அகவிலைப்படி உயர்வு 3 சதவீதமாக உயர்ந்தால் அகவிலைப்படி உயர்வானது ஏற்கனவே இருக்கும் 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயரும் வாய்ப்புள்ளதால், இது அரசு ஊழியர்களின் சம்பளத்தில் நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படியில் கடைசியாக மார்ச் 24, 2023 அன்று திருத்தம் செய்யப்பட்டது. பின்னர் அந்த அகவிலைப்படி ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க  |  LIC பம்பர் திட்டம்: ரூ. 25 லட்சம் லாபம் காணலாம்.. உத்தரவாதத்துடன் பல நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News