புதுடெல்லி: ஆபத்தான கழிவுகளை வெளிப்படுத்தும் அவற்றை கையாள்வதற்கான ஏற்பாடுகளை செய்து முடிக்காவிட்டால் அதுபோன்ற தொழிற்சாலைகளை அமைப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று  தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal , NGT), மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) மற்றும் அனைத்து மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா பெருந்தொற்று உலகில் ஏற்படுத்தி வரும் நாசங்களுக்கு மத்தியில் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் கடுமையான விதிகளை பின்பற்றவேண்டும்.  இந்த விதியை பின்பற்றவில்லை என்றால், தொழிலைத் தொடங்குவதற்கான அனுமதி கிடைக்காது. எனவே, தொழில் தொடங்குவதற்கான விதிமுறைகளை முதலிலேயே சரியாக தெரிந்துக் கொள்வது நல்லது.


மத்திய மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களின் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்படாது.  இதுதொடர்பாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) செவ்வாய்க்கிழமை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) மற்றும் அனைத்து மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும் உத்தரவிட்டது.  


Also Read | தொழில் தொடங்க ரூ .10 லட்சம் கடன் தரும் மோடி அரசு; Mudra Loan எவ்வாறு பெறுவது?


இந்த வழிகாட்டுதல்களின்படி 'மாசுபடுத்தும் கட்டணம்' என்ற கொள்கையின் அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு தொடர்ச்சியான சேதத்தை ஏற்படுத்துபவர்களிடமிருந்து இழப்பீடு வசூலிக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம், சிபிசிபிக்கு அறிவுறுத்தியது. அபாயகரமான கழிவுகளை உற்பத்தி செய்யும் தொழில்களை வரையறுத்து, அவற்றுக்கான விதிமுறைகளை உகந்த விதத்தில் ஏற்பாடு செய்யுமாறு என்ஜிடி தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான பெஞ்ச் சிபிசிபியிடம் கேட்டுக் கொண்டது.  கட்டுப்பாடுகளை மீறும் தொழில்களிடமிருந்து சுற்றுச்சூழல் இழப்பீடு வசூலிக்குமாறு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பெஞ்ச் உத்தரவிட்டது.


"கழிவுகளை அகற்றும் முறையான வசதிகளை அமைக்கும் வரை, அபாயகரமான கழிவுகளை உற்பத்தி செய்யக்கூடிய எந்தவொரு புதிய தொழிற்சாலைக்கும் சிபிசிபி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்க முடியாது" என்று பெஞ்ச் கூறியது.
2020 அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் இணக்க அறிக்கையை (compliance report) சிபிசிபிக்கு சமர்ப்பிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.