டெபிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த புதிய விதி பற்றி உங்களுக்கு தெரியுமா?
கணக்கு வைத்துள்ள வங்கியின் ATM மையங்களில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கிகளின் ATM-களில் மாதத்துக்கு 3 முறையும் இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது..!
கணக்கு வைத்துள்ள வங்கியின் ATM மையங்களில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கிகளின் ATM-களில் மாதத்துக்கு 3 முறையும் இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது..!
நாட்டின் மிகப்பெரிய அரசு நடத்தும் வங்கியான SBI தனது பயனர்களுக்கு பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், மற்ற வங்கிகளில் மாதத்திற்கு 3 முறை இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது SBI. தற்போதைய காலகட்டத்தில் டெபிகார்ட் (Depit card) இல்லாத நபர்களையே பார்க்க முடியாது. முன்பு, credit card இருந்தால் ஆல்னைல் ஷாப்பிங்கில் பிடித்த பொருட்களை வாங்க முடியும். EMI வசதிக் கூட Credit card இருந்தால் மட்டுமே சாத்தியம்.
ஆனால், இப்போது எல்லாமே மாறிவிட்டது. Depit card இருந்தால் கூட ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம். அதே போல் வங்கிகள் குறைந்த பட்ச பேலன்ஸ், ATM பண பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு உள்ளிட்டவற்றை சேவைகளை இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஆனால் அதே சமயத்தில் ATM-களில் டெபிகார்ட் பணபரிவர்த்தனையில் வாடிக்கையாளர்களிடம் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டண சேவை ஒவ்வொரு வங்கிக்கு ஏற்ப மாறுபடுகிறது. ATM பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு, Depit card உள்ளிட்டவற்றுக்கு GST வரி சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நம் வங்கிகளை சாராத பிற ATM-களில் பணம் எடுத்தல், நாம் கணக்கு வைத்துள்ள வங்கிகளின் ATM-யில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தல் கட்டணம் வசூல் பொருந்தும்.
ALSO READ | SBI வாடிக்கையாளர்களே.. உடனே இதை செய்தால் 2 லட்சம் வரை நன்மை கிடைக்கும்!!
அதாவது, கணக்கு வைத்துள்ள வங்கியின் ATM மையங்களில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கிகளின் ATM-களில் மாதத்துக்கு 3 முறையும் இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
1. HDFC வங்கி:
அக்கவுண்ட் தொடங்குபவர்களுக்கு இலவச Depit card வழங்கப்படும். டெபிகார்ட் தொலைந்தால் 200.ரூ கட்டணம் வசூலிக்கப்படும். முதல் 5 பணப்பரிவர்த்தனை சேவை முற்றிலும் இலவசம் (அனைத்து ATM-களிலும்) ஒரு மாதத்திற்கு HDFC வங்கி ATM-களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் முற்றிலும் இலவசம். ஆனால், பிற வங்கிகளின் ATM-களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்படும். ஆண்டுந்தோறும் Depit card கட்டணம் ரு. 150 வசூலிக்கப்படும்.
2. ICICI வங்கி:
ICICI டெபிட் கார்டை பெற ரூ. 250 செலுத்த வேண்டும். வருடத்திற்கு ரூ. 250 வசூலிக்கப்படும். Depit card தொலைத்தால் ரூ.199 வசூலிக்கப்படும். அதே போல், ICICI வங்கிகளில் எத்தனை முறை வேண்டுமானலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மற்ற ATM-களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 20 வசூலிக்கப்படும்.
ALSO READ | Bank Alert: உங்கள் வங்கியில் புதிய IFSC குறியீட்டை பெறவும்.. இல்லையெனில் பரிவர்த்தனை செய்ய இயலாது!
3. SBI வங்கி:
கோல்ட் Depit card கட்டணம் ரூ.100 + GST, ப்ளாட்டினம் Depit card கட்டணம் ரூ.306 + GST, கிளாசிக் டெபிகார்ட் கார்டு கட்டணம் ரூ.100 + GST, Depit card-க்கான ஆண்டு கட்டணம் ரூ. 150, டெபிட்கார்டு தொலைந்தால் ரூ. 200 வசூலிக்கப்படும்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR