2023  அக்டோபர் மாதத்தில் மூத்த குடிமக்கள் FD வட்டி விகிதம் உயர்வு: வாழ்வாதாரத்திற்காக தங்கள் சேமிப்பையே பெரும்பாலும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில், பல வங்கிகள் அக்டோபர் மாதத்தில் பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கான FD மீதான வட்டியை அதிகரித்துள்ளன. மூத்த குடிமக்களுக்கான FD விகிதங்களைத் பல வங்கிகள் திருத்தியுள்ள நிலையில், நிலையான வைப்பு கணக்கு FD மீதான வட்டியை சமீபத்தில் உயர்த்திய வங்கிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அக்டோபர் மாதத்தில் இதுவரை கனரா வங்கி,  பேங்க் ஆஃப் பரோடா  உள்ளிட்ட 9 வங்கிகள் FD மீதான வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

FD கணக்கில் மூலம் கிடைக்கும் வட்டி,  உங்கள் முதலீட்டில் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன. இது அதிக ரிஸ்க் எடுக்க முடியாத நிலையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு மிகவும் முக்கியமானது. FD கணக்குகள் வழக்கமான வருமானத்தை வழங்க முடியும் என்பதால், மூத்த குடிமக்களுக்கு உதவியாக இருக்கும்.


யூனிட்டி வங்கி (Unity Bank)


யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் (யூனிட்டி வங்கி) 701 நாட்களுக்கு FD மீதான வட்டி விகிதத்தை (FD Interest Rates) அதிகரித்துள்ளது. வங்கி இப்போது மூத்த குடிமக்களுக்கு 9.45% வட்டி வழங்குகிறது. 701 நாட்கள் முதலீட்டிற்கு ஆண்டுக்கு 8.95 சதவீத வட்டியை வழங்குகிறது.


கனரா வங்கி (Canara Bank)


கனரா வங்கி அக்டோபர் 5 முதல் அதன் FD விகிதங்களைத் திருத்தியுள்ளது. இப்போது மூத்த குடிமக்களுக்கு 7.75% வரை வட்டி வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | புனித யாத்திரை செல்ல பிளானிங் ஆ? ரயில்வேயின் அசத்தலான புதிய டூர் பேக்கேஜ் இதோ


யெஸ் வங்கி (Yes Bank)


அக்டோபர் 4 முதல், யெஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 8% வரை FD வட்டி விகிதங்களை வழங்குகிறது.


கர்நாடகா வங்கி (Karnataka Bank)


அக்டோபர் 1 முதல், கர்நாடக வங்கி மூத்த குடிமக்களுக்கு 7.75% வரை FD வட்டி விகிதங்களை வழங்குகிறது.


இண்டஸ்இண்ட் வங்கி (IndusInd Bank)


அக்டோபர் 1 முதல், IndusInd வங்கி FD கணக்கில் மூத்த குடிமக்களுக்கு 8.25% வரை  வட்டியை வழங்குகிறது.


IDFC First Bank


அக்டோபர் 1 முதல், IDFC First Bank மூத்த குடிமக்களுக்கு 8% வரை FD வட்டி விகிதங்களை வழங்குகிறது.


பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India)


அக்டோபர் 1 முதல், பாங்க் ஆஃப் இந்தியா மூத்த குடிமக்களுக்கு FD மீது 7.75% வரை வட்டி வழங்குகிறது.


மகாராஷ்டிரா வங்கி (Bank of Maharashtra)


பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா 46-90 நாட்கள் டெபாசிட்களுக்கான FD விகிதங்களை 125 bps அதாவது 1.25 சதவீதம் அதிகரித்துள்ளது. வங்கி இப்போது 3.50 சதவீதத்திலிருந்து 4.75 சதவீத வட்டியை குறுகிய கால FDகளுக்கு வழங்குகிறது.


தங்கள் பணத்தை பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு ஸோயா விரும்பும் பலரின் தேர்வாக இருக்கின்றன  ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் FD திட்டங்கள் என்றால் மிகையில்லை. இந்நிலையில், இந்த வட்டி மாற்றங்கள் நிச்சயம், மூத்த குடிமக்களுக்கு மட்டுமல்ல, பலருக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு நவராத்திரியில் ஜாக்பாட் பரிசு, அகவிலைப்படி உயர்வு வந்தாச்சு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ