ஆசியாவின் 2வது பெரிய பணக்காரர் கவுதம் அதானியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Gautam Adani salary: அதானி குழுமத்தின் தலைவரும், உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 14வது இடத்தில் இருக்கும் கவுதம் அதானியின் சம்பளம் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
Gautam Adani salary: அதானி குழுமம் இந்தியா மற்றும் உலக நாடுகளில் எண்ணெய் முதல் துறைமுகங்கள் வரை பல தொழில்களை செய்து வருகிறது. அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக உள்ளார். மேலும் உலக பணக்காரர்கள் பட்டியலில் 14வது இடத்திலும் உள்ளார். இந்நிலையில் கடந்த நிதி ஆண்டில் கவுதம் அதானி பெற்றுள்ள சம்பளம் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. 2024 நிதியாண்டில் அவர் பெற்றுள்ள சம்பளம் மற்ற குழுக்களின் தலைவர்களுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவாக உள்ளது. அதே சமயம் அதானி குழுமத்தில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகளின் சம்பளத்தைவிடவும் குறைவாக உள்ளது.
அதானி சம்பளம்
கவுதம் அதானி 2023-24 நிதியாண்டில் மொத்தமாக ரூ.9.26 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். அதானி குழுமம் நடத்தி வரும் நிறுவனங்களான சமையல் எண்ணெய், பசுமை ஆற்றல், துறைமுகம், மின்சாரம் என 10க்கும் மேற்பட்டவை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இருப்பினும், கௌதம் அதானி இரண்டு நிறுவனங்களில் இருந்து மட்டுமே சம்பளம் பெற்றுள்ளார். இந்த தகவல்கள் அதானி குழுமம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2023-24 நிதியாண்டில், கௌதம் அதானி அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.2.46 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது 3 சதவீதம் அதிகம். மேலும் அதானி போர்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.6.8 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
மற்ற குழு தலைவர்களை விட அதானி சம்பளம் குறைவு
தற்போது வெளியாகி உள்ள இந்த அறிக்கையின் படி, இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானியின் சம்பளம் மற்ற கார்ப்பரேட் குழுக்களின் தலைவர்களின் சம்பளத்தைவிட குறைவு. தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் பார்தி மிட்டல் கடந்த நிதியாண்டில் ரூ. 16.7 கோடி சம்பளம் பெற்றுள்ளார். பஜாஜ் நிறுவன தலைவர் ரூ. 53.7 கோடி சம்பளம் பெற்றுள்ளார். பவன் முஞ்சால் ரூ. 80 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இவர்களின் சம்பளத்தை விட கௌதம் அதானியின் சம்பளம் மிகவும் குறைவாக உள்ளது.
கௌதம் அதானியின் சொத்து மதிப்பு
கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 106 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உலகின் 14வது பணக்காரராக உள்ளார் அதானி. இந்த உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள இரண்டாவது இந்தியர் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி தான். அவரது நிகர சொத்து மதிப்பு $111 பில்லியன் ஆகும். மேலும் உலக பணக்காரர் பட்டியலில் 12 வது இடத்தில் உள்ளார். ஆச்சர்யப்படும் விதமாக கொரோனா தொற்றுநோய்க்கு பிறகு முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து எந்த வகையான சம்பளத்தையும் பெறவில்லை. இதற்கு முன்பு ஆண்டு சம்பளம் 15 கோடி ரூபாய் பெற்று வந்தார் முகேஷ் அம்பானி.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ