Budget 2024 Expectations: மோடி 3.0 அரசாங்கம் விரைவில் நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் பற்றிய பேச்சுகள் தொடங்கியவுடன் மக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நாட்டில் உள்ள அனைவரது பார்வையும் தற்போது பட்ஜெட் மீதே உள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கான கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு முறையும் போலவே இந்த முறையும் மக்கள் பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த வருமான வரி மாற்றங்களை இந்த முறை அரசு அறிவிக்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
மத்திய பட்ஜெட் 2024-25
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட்டில் வரி விலக்கு (Tax Exemption) அளித்து நடுத்தர மக்களுக்கு பெரிய நிவாரணம் வழங்கக்கூடும் என ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் வரவிருக்கும் பட்ஜெட்டில் நுகர்வுகளை அதிகரிக்க ரூ.50 ஆயிரம் கோடி (6 பில்லியன் டாலர்) மதிப்பிலான நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான வரி (Income Tax) விகிதங்களைக் குறைப்பதும் சாத்தியமான நடவடிக்கைகளில் அடங்கும்.
இந்த வருமான வகைகளுக்கு மாற்றங்கள்
நிதி அமைச்சக அதிகாரிகள் அதிக செலவு செய்யும் வரி செலுத்துபவர்களுக்கு (Taxpayers) வரி குறைப்புகளை பரிசீலித்து வருகின்றனர். அதாவது ஆண்டு வருமானம் ரூ.5 முதல் 10 லட்சம் வரை உள்ளவர்களுக்கு பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் வழங்கப்படலாம். தற்போது இந்த வருமான வரம்பில் 5 முதல் 20 சதவீதம் வரை வருமான வரி விதிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் (Budget) இந்த கட்டணங்களை அரசு ஓரளவு குறைக்கலாம் என எதிர்பார்க்கபப்டுகின்றது.
புதிய வரி விதிப்பு அடுக்கு எதிர்பார்க்கப்படுகிறது
இது மட்டுமின்றி, ப்ளூம்பெர்க் அறிக்கையில் மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு அடுக்கை (Tax Slab) அறிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பு வரம்பு நடுத்தர வர்க்கத்தினரை (Middle class) மையமாகக் கொண்டதாக இருக்கும். ஒட்டுமொத்தமாக, பட்ஜெட் குறித்த மதிப்பீடுகள் மற்றும் கூற்றுகள் சரியானவையாக இருந்தால், வரவிருக்கும் பட்ஜெட் நடுத்தர வர்க்கத்திற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.
நிபுணர்கள் கூறுவது என்ன?
நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, நடுத்தர வர்க்கத்தை மையமாகக் கொண்ட நிவாரணத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. தொற்றுநோய்க்குப் பிறகு, வருமானப் பிரமிட்டின் அடிமட்டத்தில் உள்ள ஏழை மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை அறிவித்தது. கார்ப்பரேட் உலகிலும் அரசு கவனம் செலுத்தியது. இருப்பினும், அதிக நுகர்வு செய்யும் நடுத்தர வர்க்கம் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
தொழில் அமைப்புகள் முன்வைக்கும் கோரிக்கைகள்
சிஐஐ மற்றும் எஃப்ஐசிசிஐ போன்ற பல தொழில் நிறுவனங்கள் அரசாங்கத்திடமும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் (Nirmala Sitharaman) தனிநபர் வருமான வரியைக் குறைக்கக் கோருகின்றன. இதற்கு அரசு செவி சாய்க்கலாம் என கூறப்படுகின்றது.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால், பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நீடித்த தேர்தலுக்குப் பிறகு, இந்த மாதம், பிரதமர் மோடி தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இப்போது முழு பட்ஜெட் ஜூலையில் தாக்கல் செய்யப்படும்.
மேலும் படிக்க | GST வரி வரம்பில் செய்யப்பட்ட மாற்றங்கள்! பெட்ரோலும் ஜிஎஸ்டிக்குள் வருமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ