பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம் ஹரியானா மற்றும் ஒடிசா ஆகிய நகரங்களில் அதன் 28  வேலிடிட்டியுடனான குறைந்தபட்ச ரீசார்ஜ் விலையை சுமார் 57 சதவீதம் அதிகரித்து ரூ.155 ஆக உயர்த்தியுள்ளது.  ஏர்டெல் நிறுவனம் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமான ரூ.99-ஐ  நிறுத்திவிட்டது மற்றும் வினாடிக்கு ரூ.2.5 பைசா என்ற விகிதத்தில் 200 மெகாபைட் டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்குகிறது.  இப்போது தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.155க்கு ஹரியானா மற்றும் ஒடிசாவில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.  தற்போது சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ள இந்த திட்டத்தினை நிறுவனம் விரைவில் இந்தியா முழுவதும் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அசத்தும் எல்ஐசி: ஒரே ஒருமுறை முதலீடு.. வாழ்நாள் முழுவதும் ரூ.50,000 ஓய்வூதியம்! 



ஒரு வாடிக்கையாளர் எஸ்எம்எஸ் சேவையைப் பெறுவதற்கு கூட, தனது மொபைலில் ரூ.155 வவுச்சர் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  ஹரியானா மற்றும் ஒடிசா பகுதிகளில் ஏர்டெல் நிறுவனம் சோதனை கட்டண உயர்வை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இந்த நடவடிக்கை அதன் மதிப்பீட்டிற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கருதப்படுகிறது. 


இதேபோன்று ஏற்கனவே 2021ம் ஆண்டில் ஏர்டெல் நிறுவனம் சில நகரங்களில் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் சலுகையை ரூ.79 என்பதிலிருந்து ரூ. 99 என்கிற அளவில் உயர்த்தியது, இந்நிலையில் இந்த ஆண்டில் தற்போது தொலைத்தொடர்பு நிறுவன சோதனை அடிப்படையில் ரீசார்ஜ் விலையை அதிகரித்துள்ளது.  தற்போது ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ரூ.155 ரீசார்ஜ் திட்டம் முன்னேற்றம் காணவில்லையெனில் மீண்டும் நிறுவன அதன் ரூ.99 ரெசார்ஜ் திட்டத்தையே செயல்படுத்தும் என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க | Bank Holidays: அலர்ட் மக்களே..டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ