அசத்தும் எல்ஐசி: ஒரே ஒருமுறை முதலீடு.. வாழ்நாள் முழுவதும் ரூ.50,000 ஓய்வூதியம்!

LIC Saral Pension Yojana: சாரல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் அல்லது காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையிலும் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம்.  

Written by - RK Spark | Last Updated : Nov 30, 2022, 09:27 AM IST
  • எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா திட்டம்.
  • மாதந்தோறும் பெரியளவில் வருமானத்தை பெறமுடியும்.
  • 40 வயது முதலே ஓய்வூதியம் கிடைக்கும்.
அசத்தும் எல்ஐசி: ஒரே ஒருமுறை முதலீடு.. வாழ்நாள் முழுவதும் ரூ.50,000 ஓய்வூதியம்! title=

இந்திய மக்கள் பலரின் நம்பிக்கைக்குரிய முதலீட்டு நிறுவனமான எல்ஐசி மக்களின் நலனுக்காக பல வகையான பாலிசிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.  எல்ஐசி வழங்கும் பலவகையான திட்டங்களில் ஒன்றுதான் எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா திட்டம், இந்த திட்டத்தில் நீங்கள் ஒருமுறை முதலீடு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுதும் மாதந்தோறும் பெரியளவில் வருமானத்தை பெறமுடியும்.  இந்த திட்டத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதில் நீங்கள் முதலீடு செய்த பின்னர் உங்களுக்கு 40 வயது முதலே ஓய்வூதியம் கிடைக்கும்.  இந்த ஒற்றை பிரீமியம் ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு முறை மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும் பின்னர் நீங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கலாம். 

மேலும் படிக்க | Post Office Scheme: 200 ரூபாய் டெபாசிட் செய்தால் லட்சங்கள் கிடைக்கும்

இந்த சாரல் பென்ஷன் யோஜனா உடனடி வருடாந்திரத் திட்டமாகும், அதாவது பாலிசி எடுத்த உடனேயே ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவீர்கள்.  பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும், அந்த நபர் இறந்த பிறகு அவரது நாமினிக்கு அடிப்படை பிரீமியம் தொகை வழங்கப்படும்.  இந்த திட்டத்தில் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் கவரேஜ் உள்ளது, இதில் கணவர் உயிருடன் இருக்கும் வரை அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.  அவர் இறந்த பிறகு அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும்.  அவரும் இறந்த பின்னர் அவர்களால் நியமிக்கப்பட்ட நாமினிக்கு அடிப்படை பிரீமியத்தொகை வழங்கப்படும்.

சாரல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் நீங்கள் மாதந்தோறும் ஓய்வூதிய தொகையாக குறைந்தபட்சம் ரூ.1000 அல்லது ரூ.12000 வரை தேர்வு செய்யலாம், இதில் அதிகபட்ச வரம்பு எதுவுமில்லை.  40 வயதில் ஒருவர்  ரூ.10 லட்சம் பிரீமியமாக டெபாசிட் செய்திருந்தால், ஆண்டுக்கு ரூ.50250 ரூபாய் என வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.  இந்த திட்டத்தில் டெபாசிட் செய்த தொகையை இடையிலேயே திரும்பப் பெற விரும்பினால் மொத்த பணத்தில் 5 சதவீதம் கழிக்கப்பட்டு பின்னர் மீதமுள்ள தொகை வழங்கப்படும்.  இந்த திட்டத்தில் இணைய குறைந்தபட்சம் 40 வயது முதல் அதிகபட்சம் 80 வயது வரை இருக்க வேண்டும், இந்த திட்டத்தில் பங்களித்த ஆறு மாதத்திற்கு பின்னர் சரண்டர் செய்யலாம்.  ஒவ்வொரு மாதமும் அல்லது காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையிலும் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | 7th pay Commission: 3 தவணைகளில் கிடைக்கவுள்ளதா டிஏ அரியர் தொகை? அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News