எச்சரிக்கை! இந்த முறைகளில் பணத்தை செலவழித்தால் வருமான வரி நோட்டீஸ் வரலாம்!
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் உங்கள் பில்லை மாதந்தோறும் கண்காணிக்க வேண்டும், அப்போது தான் வருமான வரித்துறைக்கு நீங்கள் சரியாக விளக்கம் கொடுக்க முடியும்.
1) ஒரு நிதியாண்டில் உங்கள் கிரெடிட் கார்டு பில் பணத்தை ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேல் செலுத்தினாலோ அல்லது காசோலை, வங்கிகள் மூலமாக ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் டிரான்ஸாக்ஷன்கள் செய்வது என்றாலோ நீங்கள் அதற்கு முன்னர் வருமான வரித் துறைக்கு இதுகுறித்து தெரிவிக்க வேண்டும். கிரெடிட் வைத்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் டிரான்ஸாக்ஷன்கள் செய்யும்பட்சத்தில் கார்டு வழங்கும் நிறுவனம் இதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கும். சில சமயங்களில், உங்கள் கிரெடிட் கார்டை உங்கள் நண்பருக்குக் கடனாகக் கொடுத்து, உங்கள் கிரெடிட் கார்டில் அவர்கள் அதிக தொகைக்கு ஷாப்பிங் செய்வதாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும். எனவே உங்கள் கார்டை பயன்படுத்தி அடுத்தவர்கள் ஷாப்பிங் செய்ய அனுமதிக்காதீர்கள். மேலும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் உங்கள் பில்லை மாதந்தோறும் கண்காணிக்க வேண்டும், அப்போது தான் வருமான வரித்துறைக்கு நீங்கள் சரியாக விளக்கம் கொடுக்க முடியும்.
மேலும் படிக்க | பிளிப்கார்ட் அதிரடி ஆபர்! ரூ.16,499 விலையில் ஆப்பிள் ஐபோன் வாங்கலாம்!
2) கருப்பு பணத்தை பயன்படுத்தி அதிக மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்துவதை தடுக்க வருமான வரித்துறை முயற்சி செய்து வருகிறது. அதனால் நீங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு அல்லது சேவைகளை வழங்குவதற்கு ஆகும் செலவு குறிப்பிட்ட வரம்பை மீறினால் அந்த டிரான்ஸாக்ஷன்களை பற்றி நீங்கள் படிவம் 61ஏ-ல் தெரிவிக்க வேண்டும்.
3) ஒரு நிதியாண்டில் ரூ. 50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட ரொக்க டெபாசிட்கள் மற்றும் பணத்தை எடுப்பது போன்ற வழக்குகளை பற்றியும், ஒருவரது சேமிப்புக் கணக்குகில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட டெபாசிட்டுகள் இருந்தாலும் அதைப்பற்றி வங்கிகள் வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தும்.
4) இந்தியப் பதிவுச் சட்டம், 1908-ன் கீழ் நிலம், வீடு போன்ற அசையா சொத்தை முறையாக பத்திரப்பதிவு செய்யும் வரை அந்த சொத்தை வாங்குபவருக்கு அந்த சொத்தின் மீது சட்டப்பூர்வமாக உரிமை கிடையாது. சுமார் ரூ.30 லட்சம் வரை சொத்தை ஒருவர் வாங்கலாம் ஆனால் இந்த வரம்பிற்கு மேல் ஒருவர் சொத்தை வாங்கினால் சொத்து வாங்குபவர் மற்றும் விற்றவரின் விவரங்களை வருமான வரித்துறைக்கு பதிவாளர் தெரிவிப்பார். மேலும் நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது இந்த டிரான்ஸாக்ஷன் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
5) ஒரு நிதியாண்டில் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் ஒரு நிறுவனத்திலிருந்து ஒருவர் பங்கை வாங்கினால், அவரது விவரங்களை அந்த குறிப்பிட்ட நிறுவனம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள் மற்றும் பத்திரங்களுக்கும் இந்த ரூ.10 லட்சம் வரம்பு பொருந்தும்.
6) வெளிநாட்டு நாணயங்களை பேங்கிங் கார்டு, டிராஃப்ட், செக் அல்லது வேறு நிதி கருவிகள் போன்றவற்றை பயன்படுத்தி ஒருவர் வாங்கியதற்கான விற்பனை ரசீது ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் இதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
மேலும் படிக்க | இதை செய்யாவிட்டால் பான் கார்டு அம்போ... உடனே கவனிங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ