HDFC வாடிக்கையாளர்கள் உஷார்: வங்கிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது RBI
கடந்த மாதம், HDFC வங்கியின் டிஜிட்டல் சேவைகள் நவம்பர் 21 அன்று சுமார் 12 மணி நேரம் செயல்படாததால் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
புதுடெல்லி: இணைய வங்கி வசதி மற்றும் மொபைல் வங்கி சேவைகள் தொடர்பான சமீபத்திய செயலிழப்புகளுக்கு பின்னர் HDFC வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வங்கியின் டிஜிட்டல் 2.0 திட்டத்தின் கீழ் புதிய டிஜிட்டல் வணிக உருவாக்க நடவடிக்கைகள் மற்றும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவது ஆகியவற்றை நிறுத்துமாறு RBI HDFC வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளது.
"கடந்த 2 ஆணுகளாக இணைய வங்கி / மொபைல் வங்கி / கட்டண பயன்பாடுகள் ஆகியாவற்றில் ஏற்படும் சில செயலிழப்பு சம்பவங்கள் மற்றும் சமீபத்தில், 2020 நவம்பர் 20 ஆம் தேதி வங்கியின் இணைய வங்கி சேவை மற்றும் கட்டண முறைகளில் நடந்த செயலிழப்புகள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank) டிசம்பர் 02, 2020 தேதியிட்ட ஒரு ஆணையை HDFC Bank Limited-க்கு ஒரு பிறப்பித்துள்ளது என்பதை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம்.” என தனியார் துறை கடன் வழங்குநரால் பிற நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டது.
வங்கியின் வாரியம் குறைபாடுகளை ஆராய்ந்து இதற்கான மாற்று நடவடிக்கைகளை மெற்கொள்கிறது என ரிசர்வ் வங்கியின் (Reserve Bank) உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளது. உச்ச வங்கியால் அடையாளம் காணப்பட்ட முக்கியமான அவதானிப்புகளுக்கு திருப்திகரமாக இணங்குவதன் மூலம் ரிசர்வ் வங்கியால் நடவடிக்கைகளை உயர்த்துவது பரிசீலிக்கப்படும் என்று தனியார் துறை கடன் வழங்குநரால் தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்திக்குப் பிறகு HDFC-யின் பங்குகள் பங்குச் சந்தையில் சரிந்தன. 1% க்கு மேல் குறைந்த பங்குகள் 1432 என்ற அளவிலிருந்து குறைந்து 1,388.85 ரூபாயாக இருந்தன.
கடந்த மாதம், HDFC வங்கியின் டிஜிட்டல் சேவைகள் நவம்பர் 21 அன்று சுமார் 12 மணி நேரம் செயல்படாததால் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் HDFC வங்கி வாடிக்கையாளர்கள் சந்தித்த டிஜிட்டல் சேவைகளின் மூன்றாவது இடையூறு இதுவாகும். இதற்கு RBI தகுந்த பதிலை கோரியிருந்தது.
ALSO READ: பழைய செய்தி, புதிய பார்வை: Lakshmi Vilas Bank-க்கு நன்மையே நடந்துள்ளது
HDFC வங்கி, கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை வலுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க தொடர்ந்து விரைவாக செயல்படுவதாகவும், இது தொடர்பாக கட்டுப்பாட்டாளருடன் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் கூறியது.
"வங்கி எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற டிஜிட்டல் வங்கி சேவைகளை (Digital Transaction) வழங்க முயற்சித்து வருகிறது. வங்கி தனது டிஜிட்டல் வங்கி சேனல்களில் சமீபத்திய செயலிழப்புகளை சரிசெய்ய விரைவான, உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தற்போதைய கண்காணிப்பு நடவடிக்கைகளால் தற்போதுள்ள கிரெடிட் கார்டுகள், டிஜிட்டல் வங்கி சேனல்கள் மற்றும் தற்போதுள்ள செயல்பாடுகள் ஆகியவற்றில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று எதிர்பார்ப்பதாக வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கிறது. இந்த நடவடிக்கைகள் வங்கியின் ஒட்டுமொத்த வணிகத்தை பாதிக்காது என்று வங்கி நம்புகிறது" என்று வங்கியின் சார்பில் எக்ஸ்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR