வங்கிக் கணக்கு: நம் நாட்டில் உள்ள பெரும்பான்மையானோரிடம் வங்கிக் கணக்கு உள்ளது. சொந்தமாக வணிகம் செய்பவர்கள், அலுவலக பணிகளில் இருப்பவர்கள், இல்லத்தரசிகள், இளைஞர்கள், முதியோர் என அனைத்து தரப்பு மக்களிடமும் இன்று வங்கிக்கணக்கு நிச்சயம் இருக்கும். இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட இது ஒரு அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது. மக்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை இந்தக் கணக்கில் சேமித்து வைக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டில் அறிமுகம் ஆனது முதலேயே மக்கள் தங்கள் பெரும்பாலான வேலைகளை ஆன்லைனில் செய்கிறார்கள். இதற்கு முன்னரே இந்த பழக்கம் துவங்கிவிட்டிருந்தாலும், டிஜிட்டல் இந்தியா திட்டம் ஆன்லைன் செயல்முறைகளுக்கு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. அதிக சிரமம், அலைச்சல் எதுவும் இல்லாமல் இப்போது மக்கள் தங்கள் பல அத்தியாவசிய பணிகளை ஆன்லைனில் செய்து முடிக்கிறார்கள். எனினும் ஆன்லைனில் நாம் பணிகளை செய்யும்போது அதிகபட்ச எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நமது ஒரு சிறிய தவறு கூட நம்மை பல சிக்கல்களில் மாட்டிவிடலாம். 


வங்கிக்கணக்கு செயல்பாடை பொறுத்தவரை நமது சிறிய தவறு கூட வங்கிக் கணக்கை செயலிழக்கச்செய்துவிடும். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) விதிகள் உள்ளன. இந்த விதிகளை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். உங்கள் வங்கிக் கணக்கு ஏன் செயலிழக்கக்கூடும் என்பதையும், அதை மீண்டும் செயல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதையும் பற்றி இந்த பதிவில் காணலாம். 


வங்கிக் கணக்கு எப்போது செயலிழக்கும்? 


- ஒரு வங்கிக் கணக்கு இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேல் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படாத நிலையில் அதாவது எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படாத நிலையில் இருந்தால் அது செயலற்றதாகிவிடும். இந்த கால அளவிற்கு வங்கிக்கணக்கில் எந்த பரிவர்த்தனையும் செய்யப்படவில்லை என்றால், ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி இந்த வங்கிக் கணக்குகள் செயலற்றதாகிவிடும்.


- ஒரு வங்கிக் கணக்கு (Bank Account) செயலிழந்தால், அதன் பிறகு இந்தக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியுமா முடியாதா? உங்கள் கணக்கிலிருந்து இதற்கு முன் பணம் எடுக்கப்படவில்லை என்றால், வாடிக்கையாளர் சேவை அல்லது உங்கள் வங்கிக்குச் சென்று அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தகவலைப் பெறலாம்.


மேலும் படிக்க | PPF, MF, POSS: ஜாக்பாட் வருமானத்தை அள்ளித்தரும் முதலீட்டு திட்டங்கள்


இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? 


- நீங்கள் நீண்ட காலமாக உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எந்தப் பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்து, இப்போது கணக்கு செயலிழந்திருந்தால், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் (ஆக்டிவேட் செய்ய வேண்டும்). ஒரு எளிய செயல்முறையின் மூலம் இதை செய்யலாம். 


- இதற்கான செயல்முறையை செய்ய உங்கள் பாஸ்புக்கை வங்கிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதனுடன் உங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டின் நகலில் கையெழுத்திட்டு அவற்றையும் உடன் கொண்டு செல்ல வேண்டும். இதற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட அலுவலரைச் சந்தித்து இந்த ஆவணங்களை அவரிடம் சமர்ப்பிக்கவும். அதன் பிறகு உங்கள் வங்கிக் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும்.


இதற்கிடையில் பொது மக்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு நல்ல செய்தியையும் அளித்துள்ளது. சில்லறை பணவீக்கம் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் அதில் சரிவு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை குறைந்ததால் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளது. ஆகஸ்டில் 6.83 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், செப்டம்பரில் 5.02 சதவீதமாக குறைந்துள்ளது. உணவுப் பணவீக்கமும் செப்டம்பர் மாதத்தில் 6.56 சதவீதமாக இருந்தது. இது ஆகஸ்ட் மாதத்தில் 9.94 சதவீதமாக இருந்தது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சில்லறை பணவீக்க விகிதம் 5.33 சதவீதம் மற்றும் 4.65 சதவீதமாக இருந்தது. 


மேலும் படிக்க | EPFO Withdrawal Rules: பிஎஃப் உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விதிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ