இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 10 ரூபாய் முதல் 1 லட்சம் வரை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் அதிகம் நடைபெறுகிறது. இதனால் பணத்தின் புழக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களில் கிட்டத்தட்ட 80 சதவீத மக்கள் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு நபருக்கும் தங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்யலாம் என்ற வரம்பு உள்ளது. வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதற்கான விதிகளை கண்டிப்பாக தெரிந்து வைத்து இருக்க வேண்டும். வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு முறையான ஆவணங்களை கொடுக்க தவறினால் பணம் பறிமுதல் செய்யப்படலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Chandrababu Naidu: 12 நாட்களில் ரூ.1225 கோடி அதிகரித்த நிகர மதிப்பு... கோடீஸ்வரரான 9 வயது பேரன்


வங்கியின் விதிமுறைகள்


ஆரம்ப காலகட்டத்தில் பெரிதாக டிஜிட்டல் சேவைகள் இல்லாத போது மக்கள் வங்கிகளுக்கு நேரடியாக சென்று நீண்ட நேரம் நிற்க வேண்டி இருந்தது. இதனால் நேரம் விரயமானது, ஒரு சில நேரங்களில் வங்கிக்கு சென்ற வேலையும் முடிவடைந்து இருக்காது. மேலும் விடுமுறை தினங்கள் மற்றும் வேலைநிறுத்த நாட்களில் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க கூட வங்கிகளில் நீண்ட வரிசையில் நிறக் வேண்டி இருந்தது. ஆனால், தற்போது டிஜிட்டல் பேங்கிங் அதிகரித்து உள்ளதால் இந்த பிரச்சனைகள் முடிவடைந்துள்ளது. பலரும் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் அரசுக்கு நிறைய நன்மைகள் வந்துள்ளது. 


வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யும் போது உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கிறது. மேலும் அந்த பணத்திற்கு வட்டியும் கிடைக்கிறது. சிலர் வங்கி சேமிப்புக் கணக்கில் லட்சக்கணக்கில் டெபாசிட் செய்து வைக்கின்றனர். அதிகமாக டெபாசிட் செய்யும் பட்சத்தில் வருமான வரித் துறையின் நோட்டீஸ் வர கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே உங்களது சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


சேமிப்பு கணக்கு வரம்பு


பொதுவாக வங்கி சேமிப்பு கணக்குகளில் இவ்வளவு பணம் தான் வைத்து இருக்க வேண்டும் என்பதற்கான எந்த ஒரு வரம்பும் இல்லை. எனவே,  எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்ய முடியும். ஆனால், டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு முறையான ஆதாரம் வைத்து இருக்க வேண்டும். நீங்கள் அதிகமான தொகையை டெபாசிட் செய்யும் போது அதற்கான ஆதாரத்தையும் வைத்து இருப்பது நல்லது. ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்யும் போது நீங்கள் கண்காணிக்கப்பட வாய்ப்புள்ளது. வங்கி கணக்கில் டெபாசிட் செய்வது மட்டுமில்லாமல் எஃப்டி, மியூச்சுவல் ஃபண்டு, முதலீடு போன்றவையும் கண்காணிக்கப்படும். 


முறையான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்


வங்கி கணக்கில் அதிகமாக டெபாசிட் செய்யும் போது வருமான வரித்துறை இதற்கான ஆதாரத்தை கேட்கும். இதற்கு நீங்கள் அளிக்கும் பதில் திருப்தியாக இல்லாத பட்சத்தில் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். உங்கள் பணத்தில் இருந்து 60 சதவீதம் வரி, 25 சதவீதம் கூடுதல் கட்டணம் மற்றும் 4 சதவீதம் செஸ் வரி விதிக்கப்படலாம். உங்கள் பணத்தை வெறுமனே சேமிப்பு கணக்கில் வைப்பதைவிட பங்குச் சந்தை அல்லது நல்ல முதலீடு திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் நல்ல லாபம் வர வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க | 15 நாட்களில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமா? 2 வாரத்தில் நல்ல லாபம் தரும் பங்குகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ