வங்கி ஊழியர்கள் கோரிக்கை


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கி ஊழியர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். வாரத்துக்கு 2 நாள் விடுமுறை, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவற்றை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக அண்மையில் போராட்டத்தையும் அறிவித்தனர். அதாவது ஜனவரி 30, 31 ஆம் தேதி நாடு தழுவிய வங்கி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என கூறியிருந்தனர்


மேலும் படிக்க | ஜன. 30, 31-ல் வங்கி ஊழியர்கள் நாடுதழுவிய வேலை நிறுத்தம்


மும்பையில் சமரச பேச்சு


இது தொடர்பாக மும்பையில் இந்திய வங்கி நிர்வாகிகளுடன் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் ஐந்து நாள் வங்கிச்சேவை மற்றும் ஓய்வூதியத்தை புதுப்பித்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஜனவரி 31 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு வங்கி வேலை நிறுத்தம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.


மீண்டும் பேச்சுவார்த்தை


இதுதொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் வெங்கடாசலம் பேசும்போது, இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) ஜனவரி 31 அன்று தொழிற்சங்கங்களுடன் ஒரு கூட்டத்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமரசக் கூட்டத்தில், ஐந்து நாள் வங்கிச் சேவை, ஓய்வூதியத்தைப் புதுப்பித்தல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்தல் ஆகிய மூன்று பொதுவான பிரச்னைகள் குறித்து ஜனவரி 31-ஆம் தேதி விவாதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பிரச்சினைகள் குறித்து அந்தந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர் சங்கங்களுடன் தனித்தனியாக விவாதிக்கப்படும்" என தெரிவித்தார்.


மேலும் படிக்க | Budget 2023-24: இந்த பட்ஜெட்டில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ