முதலீடு செய்ய திட்டமா? விதி 72, 114, 144 - இந்த 3 விதிகள் பற்றி தெரியுமா?
உங்களுக்கு தெரியாத பல முதலீட்டு விதிகள் உள்ளன, அந்த விதிகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் சிறந்த திட்டத்தில் முதலீடு செய்து சிறந்த அளவிலான வருமானத்தை பெற்று பயனடைய முடியும்.
ஒவ்வொருவரும் தங்களது எதிர்கால தேவைகளுக்காக ஒவ்வொரு வகையான திட்டங்களிலும் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். நீங்கள் முதலீடு செய்தாலும் அல்லது சேமித்தாலும் அதிக வருமானத்தைப் பெற வேண்டுமானால் எப்போதும் ஒரு மாற்று திட்டத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டியது அவசியம். சிறந்த முதலீடுகளைத் தேர்ந்தெடுத்து, சிறந்த வருவாயைத் தரும் முதலீட்டு உத்தியை வடிவமைப்பது உங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கக்கூடும். உங்களுக்கு தெரியாத பல முதலீட்டு விதிகள் உள்ளன, அந்த விதிகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் சிறந்த திட்டத்தில் முதலீடு செய்து சிறந்த அளவிலான வருமானத்தை பெற்று பயனடைய முடியும். எந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தாலும் அதிலிருந்து வரவிருக்கும் ஆண்டுகளில் வழங்கக்கூடிய வட்டி விகிதத்தைப் பற்றிய 100 சதவீத உத்தரவாதத்தை உங்களால் பெற முடியாது. இப்போது இந்த முதலீட்டு விதிகளை நீங்கள் தெரிந்துகொள்வதன் மூலமாக பல நன்மைகளை பெற முடியும்.
மேலும் படிக்க | ஐபோன் 14 பிளிப்கார்டில் அசத்தல் தள்ளுபடி... ரூ. 12 ஆயிரத்திற்கும் மேல் குறைவு!
விதி 72:
விதி 72 என்பது உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க எவ்வளவு ஆண்டு காலம் ஆகும் என்பதைக் கணக்கிடுவதற்கான ஃபார்முலா ஆகும். முதலீட்டாளர்கள் தங்கள் ஆரம்ப முதலீடு இரட்டிப்பாகும் ஆண்டுகளின் எண்ணிக்கையை 72ஐ வருடாந்திர வருவாய் விகிதத்தால் வகுத்து கணிக்க முடியும்.
எடுத்துக்காட்டு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 14% வருடாந்திர வருமானத்தை அளித்தால், உங்கள் பணத்தின் மதிப்பு இரட்டிப்பாவதற்கு (72/14) = 5.14 ஆண்டுகள் ஆகும்.
விதி 114:
72-ன் விதிக்கு அடுத்ததாக வரும் 114 விதி, ஒரு முதலீட்டாளருக்கு அவர்களின் பணம் மூன்று மடங்காக எவ்வளவு காலம் ஆகும் என்பதை காட்டுகிறது. 114 என்ற எண்ணை எடுத்து முதலீட்டுப் பொருளின் வருவாய் விகிதத்தால் வகுக்கவும், இப்போது உங்கள் முதலீடு மூன்று மடங்காக எவ்வளவு காலம் ஆகும் என்பதை பார்க்க முடியும்.
எடுத்துக்காட்டு: 10% வருடாந்திர வருமானத்துடன் நீங்கள் ரூ. 100,000 முதலீடு செய்தால், மூன்று மடங்காக 114/10 அல்லது 11.4 ஆண்டுகள் ஆகும்.
144 விதி:
உங்கள் முதலீட்டை நான்கு மடங்காக எவ்வளவு காலம் ஆகும் என்பதை இந்த விதி உங்களுக்கு தெரியப்படுத்துகிறது. நீண்ட காலம் முதலீடு செய்யும் நபர்களுக்கு இந்த விதி உதவும், இந்த விதியை பயன்படுத்தி உங்கள் முதலீடு எப்போது நான்கு மடங்காக உயரும் என்பதை பார்க்கமுடியும்.
எடுத்துக்காட்டு: நீங்கள் 10% வருடாந்திர வருமானத்துடன் ரூ.1,000,000 முதலீடு செய்தால் நான்கு மடங்காக 144/10 = 14.4 ஆண்டுகள் ஆகும்
மேலும் படிக்க | இந்த சோலார் ஜெனரேட்டர் உடனே வாங்குங்க, எலக்ட்ரிசிட்டி பில் வராது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ